azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 03 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 03 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Your life should not be a wasteful round of eating, drinking and sleeping; you have the Atma (soul) as your reality and so learn to become aware of that unfailing source of bliss. By properly using your intelligence, you can tap that spring and be supremely blissful. Happiness can be won only by proceeding towards God, not by following the urges of the senses. Of the twenty four hours that are available to you each day, let Me advise you to devote a small fraction to meditation or prayers or reading scriptures or listening to discourses on the divine sport (leelas) of the Lord. Think of God, and the gratitude you owe to Him for the human life He has gifted you and the various material, moral and intellectual talents He has endowed you with before you commence any task. You will certainly experience great benefit, and you will have peace, joy and success in your endeavours through Divine Grace. [Divine Discourse, Mar 16, 1973]
EDUCATION MUST RESULT IN HUMILITY.HUMILITY IS
THE BEST CREDENTIAL FOR SUCCESS IN LIFE - BABA
உங்களது வாழ்க்கை, உண்டு, உறிஞ்சி, உறங்கும் ஒரு வீணான சுற்றாக இருக்கக் கூடாது. ஆத்மாவை உங்களது உண்மை நிலையாகப் பெற்றுள்ளீர்கள்; எனவே,அந்தத் தோல்வியே அடையாத ஆனந்த ஊற்றைப் பற்றிய விழிப்புணர்வைப் பற்றி அறிந்து கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களது புத்தியை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், அந்த ஊற்றைப் பயன்படுத்தி, பேரானந்தத்துடன் இருக்க முடியும். புலன்களின் உந்துதல்களைப் பின்பற்றாது, தெய்வத்தை நோக்கிச் செல்வதன் மூலம் மட்டுமே, சந்தோஷத்தைப் பெற முடியும்.ஒவ்வொரு நாளும் உங்களுக்கு இருக்கும் 24 மணி நேரத்தில், ஒரு சிறு பகுதியையாவது, தியானம் அல்லது பிரார்த்தனை அல்லது புனித நூல்களைப் படிப்பது அல்லது இறைவனது லீலைகளைப் பற்றிய பிரசங்கங்களைக் கேட்பது ஆகியவற்றிற்காக அர்ப்பணியுங்கள் என நான் அறிவுறுத்துகிறேன். எந்த ஒரு பணியைத் தொடங்கும் முன்பும், இறைவனையும்,அவன் பரிசளித்த இந்த மனித வாழ்க்கை மற்றும் அவன் தந்த உடல்,மனம் மற்றும் புத்திகூர்மைகளுக்காக அவனுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய நன்றியையும் எண்ணிப் பாருங்கள் . நீங்கள் கண்டிப்பாக, அதிக அளவு பயன் பெறுவதோடு, தெய்வீக அருளால், உங்களது முயற்சிகளில் சாந்தி, சந்தோஷம் மற்றும் வெற்றியைப் பெறுவீர்கள்.
கல்வி பணிவைத் தர வேண்டும். பணிவே, வாழ்க்கையின் வெற்றிக்கான மிகச் சிறந்த தகுதியாகும்- பாபா