azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 28 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 28 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Eating must be succeeded by elimination; inhalation has to be followed by exhalation; blood must flow in and flow through, to circulate and maintain health. Taking in and giving up are the obverse and reverse of the same process. This is true of individuals, societies, nations and the human race. Progress and peace depends on sacrifice, renunciation and service. Be alert to the call to serve, everywhere, at all times; be ready with a smile, a kind word, a useful suggestion, diligent care, and pleasant reply. Look around for chances to relive, rescue or resuscitate. Train yourselves that you may render help efficiently and well. Seva plants a seed on stone and is delighted to see it sprout! Plant it with love, and the seed will discover love inside the stone and draw sustenance therefrom. Seva is the most rewarding form of austerity, the most satisfying and the most pleasurable. It springs out of love and scatters love in profusion.- Divine Discourse, May 19, 1969.
True sacrifice is sharing with others one’s wealth, strength and qualities,
which are derived from society. - Baba
உடல் நலத்தைப் பேணிக் காப்பதற்கு, சாப்பிடுவதைத் தொடர்ந்து , வேண்டாதவை வெளியேற்றப் பட வேண்டும் ;சுவாசம் உள் வாங்கப் பட்ட பின் , அது வெளியேற்றப் பட வேண்டும்; இரத்தம் நாளங்களில் உள் புகுந்து சீராகப் பாய்ந்து , பரவ வேண்டும் . வாங்கிக் கொள்வதும் ,விட்டு விடுவதும் ஒரே செயல்முறையின் இரண்டு பக்கங்களே .இது தனி மனிதர்கள் ,சமூகங்கள் , நாடுகள் மற்றும் மனித குலத்திற்கே கூடப் பொருந்தும் . தியாகம்,பற்றின்மை மற்றும் சேவையைப் பொறுத்தே முன்னேற்றமும்,சாந்தியும் இருக்கும். எங்கும், எப்போதும் ,சேவைக்கான அறைகூவலுக்காகக் காத்திருங்கள்:ஒரு புன்னகை, ஒரு கனிவான வார்த்தை , ஒரு பயனுள்ள ஆலோசனை ,ஒரு புத்திசாலித்தனமான பரிவு மற்றும் ஒரு இனிமையான பதில் ஆகியவற்றுடன் தயாராக இருங்கள்.நிவாரணம் ,மீட்பு மற்றும் புத்துயிர் ஊட்டுவதற்கான வாய்ப்புக்கள் எங்கு உள்ளன என்று உங்களைச் சுற்றிப் பாருங்கள். சிறந்த முறையிலும் ,நன்றாகவும் உதவி அளிப்பதற்கான பயிற்சிகளை உங்களுக்கே செய்து கொள்ளுங்கள் .சேவை, கல்லிலும் கூட ஒரு விதையை ஊன்றி விட்டு அது முளை விட்டு வருவதைக் கண்டு பூரிக்கிறது ! அதை அன்புடன் நடுங்கள் ; அந்த விதையே கல்லினுள்ளும் கூட அன்பைக் கண்டறிந்து அதிலிருந்து வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொள்ளும் .சேவையே, மிகச் சிறந்த பயனளிக்கும், மிகச் சிறந்த திருப்தி தரும் , மிகச் சிறந்த இன்பம் அளிக்கும் ஆன்மீக சாதனை ஆகும்.அது அன்பிலிருந்து ஊற்றெடுத்து , அபரிமிதமாக அன்பை எங்கும் பரப்புகிறது .
சமுதாயத்திலிருந்து பெறப்பட்ட ,தனது செல்வம்,சக்தி மற்றும் சத்குணங்களை பிறருடன் பகிர்ந்து கொள்வதே உண்மையான தியாகமாகும் - பாபா