azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 26 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 26 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Service (Seva) in all its forms is primarily a spiritual discipline to cleanse your own mind. Without the inspiration from this attitude, the urge is bound to ebb and grow dry; or may meander into pride and pomp. Just think for a moment: Are you serving God? Or is God serving you? When a pilgrim stands waist deep in the Ganges, takes the sacred water in his palms, recites a mantra, pours the water as offering to the Deity, or arpan he calls it, what he has done is only poured Ganga into Ganga! When you offer milk to a hungry child, or a blanket to a shivering brother on the pavement, you are but placing God’s gift into the hands of another gift of God! You are reposing the gift of God in a repository of the Divine Principle! God serves and allows you to claim that you served! Remember, without His Will, not a single blade of grass swings!- Divine Discourse, May 19, 1969.
FILL YOUR EVERY MOMENT WITH GRATITUDE TO THE GIVER AND RECEIPIENT OF ALL GIFTS - BABA
எல்லா விதமான சேவையும் ,பிரதானமாக ,உங்களது சொந்த மனதைத் தூய்மைப் படுத்தும் ஓரு ஆன்மீக சாதனை ஆகும் .இப்படிப்பட்ட மனப்பாங்கிலிருந்து எழும் உத்வேகம் இன்றி , சேவை ஆற்றுவதற்கான உற்சாகம் கண்டிப்பாகத் தணிந்து வறண்டு விடும் அல்லது வெறும் பகட்டும் படாடோபமுமாக திசை மாறிவிடும் . ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் ; நீங்கள் தெய்வத்திற்கு சேவை செய்கிறீர்களா ? அல்லது தெய்வம் உங்களுக்கு சேவை செய்கிறதா ? ஒரு தீர்த்த யாத்ரீகன் , இடுப்பளவு கங்கை நீரில் நின்று கொண்டு, தனது உள்ளங்கையில் அந்தப் புனித நீரை ஏந்தி , ஒரு மந்திரத்தை உச்சரித்து, அந்த நீரை தெய்வத்திற்கு அர்ப்பணமாகக் கொட்டும்போது ,அவன் செய்வதெல்லாம் கங்கை நீரை எடுத்து கங்கையிலேயே விடுவது தான் !நீங்கள் பசியால் வாடும் ஒரு குழந்தைக்கு பால் அளித்தாலோ அல்லது நடை பாதையில் குளிரில் நடுங்கிக்கொண்டு இருக்கும் ஒரு சகோதரனுக்கு ஒரு போர்வை அளித்தாலோ , நீங்கள் செய்வதெல்லாம் ,தெய்வத்தின் ஒரு பரிசை மற்றுமொரு தெய்வப் பரிசின் கரங்களில் அளிக்கிறீர்களே அன்றி வேறில்லை . நீங்கள் தெய்வம் தந்த பரிசை தெய்வீகத்தை உள்ளடக்கிய ஒரு களஞ்சியத்திற்குள் வைக்கிறீர்கள் !இறைவனே சேவை செய்து விட்டு , நீங்களே சேவை செய்தீர்கள் என்று உரிமை கொண்டாடிக் கொள்ள அனுமதிக்கிறான் ! அவனது சங்கல்பம் இன்றி, ஒரு புல் கூட அசைய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் !
உங்களது ஒவ்வொரு தருணத்தையும் அனைத்து பரிசுகளையும்
எடுத்துக் கொடுப்பவரும், ஏற்றுக்கொள்பவரும் ஆன
இறைவன் மீது கொள்ளும் நன்றி உணர்வால் நிரப்புங்கள் - பாபா