azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 25 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 25 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Let your duties (karma) be suffused with devotion (bhakti), that is to say, with humility, love, compassion, and nonviolence. Without wisdom, devotion will be as light as a balloon that drifts along any gust of wind. Mere wisdom will make the heart dry; devotion softens it with empathy, and karma gives your hands useful work, so your every minute is sanctified. Hence devotion is referred to as upasana — dwelling near, feeling the presence, sharing the sweetness of the Divine. The yearning for this Upasana prompts you to do pilgrimages, construct and renovate temples, etc. The various rituals with which the Lord is worshipped with is for the satisfaction of the mind which craves for personal contact with the Supreme. These are karmas of high order that lead to spiritual wisdom. First start with the idea, “I am in the Light” then you experience, “The light is in me”, leading to the conviction, “I am the Light!” That is supreme wisdom! (Divine Discourse, July 7, 1963)
WHEN THE HEART IS PURE, THE LIGHT OF WISDOM SHINES- BABA
உங்களது கர்மாக்கள் பக்தியில் தோய்ந்ததாக இருக்கட்டும்; அதாவது பணிவு, ப்ரேமை,பரிவு மற்றும் அஹிம்ஸை ஆகியவற்றில். ஞானம் இன்றி, பக்தி, காற்றடிக்கும் பக்கம் எல்லாம் அலைந்து செல்லும் ஒரு பலூனைப் போல ஆகி விடும். வெறும் ஞானம் மட்டுமே இருந்தால் அது இதயத்தை வரண்டதாக்கி விடும் ; பக்தியே அதனை, பச்சாதாபத்தால் மிருதுவானதாக ஆக்குகிறது; கர்மா, உங்களது கரங்களுக்கு உபயோகமான வேலையைக் கொடுப்பதன் மூலம், உங்களது ஒவ்வொரு நிமிடத்தையும் புனிதமாக்குகிறது.எனவே தான், பக்தி, உபாஸனா எனப்படுகிறது – அதாவது, தெய்வத்தின் அருகாமையில் இருந்து கொண்டு, அதனது இருக்கையை உணர்ந்து, அதன் இனிமையை பகிர்ந்து கொள்வது என்பதாகும். இந்த உபாஸனைக்கான ஏக்கமே, உங்களை தீர்த்த யாத்திரை செல்வது, கோவில்களைக் கட்டி, புனர்நிர்மாணம் செய்வது போன்றவற்றைச் செய்யத் தூண்டுகிறது.தெய்வத்தை ஆராதிப்பதற்காகச் செய்யப்படும் பலவிதமான சடங்குகளும், பரமாத்மாவுடன் தனிப்பட்ட உறவு கொள்ள விழையும் மனதின் திருப்திக்காகவே. இவை, ஆன்மீக ஞானத்திற்கு இட்டுச் செல்லும் மிக உயர்ந்த கர்மாக்களாகும். முதலில்‘’ நான் ஜோதியில் இருக்கிறேன்’’ என்பதில் தொடங்குங்கள்; பின்னர் நீங்கள், ‘’ ஜோதி என்னுள் இருக்கிறது‘’ என்பதை அனுபவித்து, ‘’ நானே ஜோதி ‘’ என்ற உறுதியான நம்பிக்கைக்கு இட்டுச் செல்லப்படுகிறீர்கள்.அதுவே தலை சிறந்த ஞானமாகும் !
இதயம் பரிசுத்தமாக இருக்கும்போது,
ஞான ஜோதி ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது- பாபா