azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 23 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 23 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
The age span 16-30 years is crucial, for that is the period when life adds sweetness to itself, when talents, skills and attitudes are accumulated, sublimated and sanctified. If the tonic of unselfish service (seva) is administered to the mind during this period, life's mission is fulfilled, for the process of sublimation and sanctification will be hastened by this tonic. Do not serve for the sake of reward, attracting attention, or earning gratitude, or from a sense of pride at your own superiority in skill, wealth, status or authority. Serve because you are urged by love. If and when you fail, ascribe the failure to your own inadequacy, insincerity or ignorance. Examine the springs of action; disinfect them from all trace of ego. Do not throw the blame on the recipients of the seva, or on your collaborators and co-workers, or on God. When you succeed, ascribe the success to the Grace of God, who urged you on, as love from within you. (Divine Discourse, May 19, 1969)
YOUTH IS THE STAGE IN LIFE WHEN THE SLIGHTEST TURN
TOWARDS WRONG WILL SPELL DISASTER - BABA
16லிருந்து 30 வரை உள்ள வயது காலம் மிகவும் முக்கியமானதாகும்; ஏனெனில் இந்தக் காலத்தில் தான் வாழ்க்கை தனக்கே இனிமை கூட்டுவதோடு, திறமைகள், திறன்கள், மனப்பாங்குகள் ஆகியவை திரட்டப் பட்டு, புடமிடப்பட்டு, புனிதப்படுத்தப் படுகின்றன.இந்தக் காலகட்டத்தில், தன்னலமற்ற சேவை எனும் ஊட்டச் சத்து, மனதிற்கு அளிக்கப் படுமானால், புடமிடுதலும், புனிதப்படுத்தலும் துரிதப்படுத்தப் பட்டு வாழ்க்கையின் குறிக்கோள் பூர்த்தி அடைகிறது. பரிசு பெறுவதற்காகவோ, பாராட்டுதலுக்காகவோ அல்லது நன்றி பெறுவதற்காகவோ அல்லது உங்களது சொந்த திறன், செல்வம், அந்தஸ்து அல்லது பதவியின் மேன்மையில் உங்களுக்கு உள்ள ஒரு தற்பெருமை உணர்வினாலோ, சேவை ஆற்றாதீர்கள். நீங்கள் ப்ரேமையினால் உந்தப்படுகிறீர்கள் என்பதனால், சேவை செய்யுங்கள். நீங்கள் தோல்வி அடையும் போது,அதை உங்களது போதாமை, அசிரத்தை அல்லது அறியாமையையே சாரும் என்பதை உணருங்கள். உங்களது செயல்கள் எங்கிருந்து ஊற்றெடுக்கின்றன என்பதை ஆராய்ந்து, அஹங்காரத்தின் அனைத்து சுவடுகளையும் அவற்றிலிருந்து நீக்குங்கள். சேவையைப் பெறுபவர்களையோ அல்லது உங்களது உதவியாளர்களையோ அல்லது சக சேவகர்களையோ அல்லது தெய்வத்தையோ குறை கூறாதீர்கள். நீங்கள் வெற்றி பெறும்போது, அந்த வெற்றி உங்களுள் ப்ரேமையாக இருந்து உங்களை உத்வேகப் படுத்திய தெய்வத்தின் அருளையே சாரும் என்பதை உணருங்கள்.
இளமை என்பது, தவறான ஒரு சிறு திருப்பம் ஆனால் கூட,
பேரழிவில் முடியக் கூடிய , வாழ்க்கையின் ஒரு நிலையாகும் - பாபா