azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 20 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 20 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
The agglomeration of body, mind and senses is preventing you from recognising your inherent Divinity. You are the cause of your bondage through the body and the mind. When you understand the nature of the body-mind complex, you will realise your true essence. It is enough if you develop the conviction that you and the Divine are one. Cultivate steadfast faith in this Divine oneness through love. That love will lead you to Self-realisation. Wherever you are and whatever you do, regard yourselves as instruments of God and act on that basis. You need not wait for a whole year for Gurupoornima. Treat every moment of your life as a dedication to the Lord. This is the best way to experience Divinity at all times and places. This is true Sakshatkara (realisation). Firmly believe that God is in everyone and always act accordingly. Such sacred attitude will grow through continuous practice. (Divine Discourse, Jul 7, 1990)
LOVE ALL AND SERVE ALL. HELP EVER AND HURT NEVER- BABA
உங்களை, உடல், மனம் மற்றும் புலன்களின் கூட்டமைப்பு, உங்களது உள்ளார்ந்த தெய்வீகத்தை உணர விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறது. உடல் மற்றும் மனதின் மூலம் நீங்கள் கட்டுண்டு இருப்பதற்கு, நீங்களே காரணம். மனம் மற்றும் புத்தி என்ற கலவையின் தன்மையை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, உங்களது உண்மையான சாரத்தை உணர்வீர்கள்.நீங்களும், இறைவனும் ஒன்றே என்ற உறுதியான நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொண்டு விட்டால், அதுவே போதும். ப்ரேமையின் மூலம், இந்த தெய்வீக ஒருமையில் அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த ப்ரேமையே உங்களை, தன்னை உணர்தல் என்ற நிலைக்கு இட்டுச் செல்லும். நீங்கள் எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும், உங்களை இறைவனது கருவிகளாகக் கருதி, அந்த அடிப்படையில் செயலாற்றுங்கள். குரு பூர்ணிமாவிற்காக ஒரு முழு வருடம் நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் தெய்வத்திற்கு ஒரு அர்ப்பணமாகக் கருதுங்கள். எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும், தெய்வீகத்தை அனுபவிப்பதற்கு இதுவே மிகச் சிறந்த வழியாகும். இதுவே உண்மையான ஆத்ம சாக்ஷாத்காரமாகும்.தெய்வம் ஒவ்வொருவருள்ளும் உறைகிறது என்பதை உறுதியாக நம்பி, எப்போதும் அதன்படி நடந்து கொள்ளுங்கள். இடையறாத பயிற்சியின் மூலம், இப்படிப் பட்ட புனிதமான மனப்பாங்கு வளரும்.
அனைவரையும் நேசியுங்கள், அனைவருக்கும் சேவை செய்யுங்கள்.
எப்போதும் உதவுங்கள், ஒருபோதும் தீங்கிழைக்காதீர்கள் - பாபா