azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 17 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 17 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
People commit many offences, knowingly or unknowingly, not only in this life, but also in previous lives. The imprint of these actions is carried by the subconscious memory (Chitta) over many lives. When the mirror of the mind is soiled by these relics, the mind cannot perceive anything in its true state. This is the reason why people are unable to recognise their own true nature. Hence it is necessary to cleanse the mirror of impurities on it. This is done by regulating your food and recreational habits! You must ensure that the food you eat is obtained through righteous means. Many sufferings today are only because people consume food obtained by unrighteous means. It may not always be possible to ensure highest purity at all times. To get over this difficulty, there is an easy and effective solution! Before eating, offer the food to God! Then it becomes a gift from God (prasadam) and all impurities in the food are removed. This helps in cleansing the mind. Continue this practice always! (Divine Discourse, May 25, 1990)
TO PURIFY YOUR MIND THE FIRST REQUISITE IS PURE FOOD- BABA
மனிதர்கள், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, இந்த ஜன்மத்தில் மட்டும் அல்லாது, முந்தைய ஜன்மங்களிலும், பல தவறுகளைச் செய்கிறார்கள். இந்தச் செயல்களின் முத்திரை, ஒருவரது ஆழ்மனதின் நினைவகத்தில் (சித்தத்தில்), பல ஜன்மங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நினைவுச் சின்னங்களால் மனதின் கண்ணாடி அழுக்கடையும் போது, மனம் எந்தப் பொருளின் உண்மை நிலையையும் உணரமுடியாது. மனிதர்கள் , தங்களது உண்மை நிலையை உணர முடியாததற்கு இதுவே காரணம். எனவே, இந்தக் கண்ணாடியின் மீதுள்ள அழுக்குகளை நீக்குவது அவசியமாகிறது. உங்களது உணவு மற்றும் கேளிக்கைப் பழக்கங்களை முறைப்படுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம் ! நீங்கள் உண்ணும் உணவு, தார்மீகமான வழிகளில் பெறப்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்நாளின் மனிதர்கள் அதர்மமான வழிகளில் பெற்ற உணவை உட்கொள்வதால் மட்டுமே தான், பல கஷ்டங்கள், ஏற்படுகின்றன. எல்லாக் காலங்களிலும், மிக உயர்ந்த தூய்மையை உறுதி செய்வது, எப்போதும் சாத்தியமாக இல்லாமல் போகலாம். இந்தச் சிரமத்தைத் தீர்ப்பதற்கு ஒரு எளிய மற்றும் பயனுள்ள தீர்வு இருக்கிறது ! சாப்பிடுவதற்கு முன் உணவை , தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்து விடுங்கள்! பின்னர் அதுவே, இறைவன் அளிக்கும் பிரசாதம் ஆகி விடுகிறது;உணவில் உள்ள அனைத்து மாசுகளும் நீக்கப் பட்டு விடுகின்றன.இது, மனதை தூய்மைப் படுத்தவும் உதவுகிறது.இந்தப் பழக்கத்தை எப்போதும் தொடர்ந்து செய்யுங்கள்!
மனதைத் தூய்மைப் படுத்துவதற்கு
முதல் தேவை தூய உணவாகும் - பாபா