azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 15 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 15 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

What can the possession of canvas and paint do, if an artist with vision is not inspired to paint? What can the chisel and a lump of marble do if no image is formed in the heart of a devoted sculptor? That vision and that image are the sparks of the Divine. You are all 'the Divine' packed in human skin and bone; you are the Atma encased in the evanescent flesh. Know this and you become fearless, happy without limit. Get rid of the ego-enclosure in which you now feel you are entrapped; then you are liberated from the non-existent ‘prison’ which now enfolds you as hard as an existent one! How must one live so as to not demean one’s human status? One has to be conscious all the time that this body and its equipment are a temporary abode; that one is the eternal Divine, the Atma is apparently encaged in the physical, as the moon in a pot of water. This knowledge of the spirit is the higher wisdom. (Divine Discourse, Jul 8, 1971)
KNOW THAT THE PURPOSE OF HUMAN BIRTH IS TO REACH THE LORD THROUGH WORSHIP - BABA
கற்பனைத் திறன் கொண்ட ஒரு ஓவியக் கலைஞனுக்கு, சித்திரம் வரைய வேண்டும் என்ற உத்வேகம் இல்லை என்றால், சித்திரம் வரையப்படும் திரையையும், வண்ணத்தையும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? ஒரு பக்தியுள்ள சிற்பியின் இதயத்தில் ஒரு ரூபம் உருவாகவில்லை என்றால், உளியும், ஒரு பளிங்குக் கல்லும் என்ன செய்ய முடியும்? அந்தக் கற்பனையும், ரூபமுமே தெய்வீகத்தின் ஒளிக் கீற்றுகளாகும். நீங்கள் அனைவரும்,மனிதத் தோல் மற்றும் எலும்பில் கட்டி வைக்கப் பட்டிருக்கும் தெய்வீகங்களே.; நிலையற்ற சதைக்கூட்டில் உறையிடப் பட்டு இருக்கும் ஆத்மாவே நீங்கள். இதை அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் அச்சமன்றி, அளவற்ற ஆனந்தம் கொண்டவர்களாக ஆகி விடுவீர்கள்.நீங்கள் சிக்கிக் கொண்டு இருப்பதாகக் கருதும் அஹங்காரக் கூண்டினை விட்டொழியுங்கள் ; பின்னர் ,நிஜமான ஒரு சிறையைப் போல, இப்போது உங்களை உறுதியாகச் சுற்றி மூடிக் கொண்டிருக்கும்,‘’கற்பனைச் சிறையிலிருந்து ‘’ நீங்கள் விடுவிக்கப் படுவீர்கள் ! தனது மனித நிலையை இழிவு படுத்தாமல், ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும் ? ஒருவர் எப்போதும்,இந்த உடலும் அதன் அவயவங்களும் ஒரு தாற்காலிகமான இருக்கையே; ஒரு பானை நீரில் பிரதிபலிக்கும் சந்திரனைப் போல, அந்த நிரந்தர தெய்வீகமான ஆத்மா இந்த உடலில் அடைக்கப் பட்டுள்ளது என்ற விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இந்த ஆத்ம ஞானமே, உயர் ஞானமாகும்.
மனிதப் பிறவியின் நோக்கம் வழிபாட்டின் மூலம் தெய்வத்தை அடைவதே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்- பாபா