azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
The spiritual aspirant’s objective should be to be mentally ready for the realisation of Godhead, at any given moment. That is to say, the heart must be cleansed of despair, freed from hesitation and doubt, and open to the waves of bliss that surge in from all sides of God's Universe. Love brings the waves in, ever expansive as they are! The path you tread depends on the principles you believe in! Follow good principles, you will be led along to reap good fruits. Adhere to Divine directives with faith and sincerity. That will help you realise the purpose of your life. Since every act has its appropriate reaction, beware of evil intentions, wicked words, acts that harm others and therefore harm you. I desire that you must always tread the path of goodness and achieve good results in life. Live so well, such that, you revere every being as moving temples of the Divine. (Divine Discourse, Apr 18, 1971)
CONTEMPLATION OF GOD IS THE ONLY WAY TO KEEP YOUR SENSES PURE - BABA
எந்தத் தருணத்திலும்,தனது தெய்வீகத்தை உணருவதற்கு, மனதளவில், தயாராக இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆன்மீக சாதகனின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.அதாவது,இதயம் ,விரக்தி நீக்கப் பட்டும், தயக்கம் மற்றும் சந்தேகம் இன்றியும், இறைவனது பிரபஞ்சத்தின் அனைத்து திசைகளிலிருந்தும் பெருக்கெடுத்து வரும் ஆனந்த அலைகளை ஏற்கும் வண்ணமும் இருக்க வேண்டும். என்றும் பரவி வரும் அலைகளை ப்ரேமை கொண்டு வருகிறது ! நீங்கள் மேற்கொள்ளும் பாதை, நீங்கள் நம்புகின்ற கொள்கைகளைப் பொறுத்து இருக்கும் ! நல்ல கொள்கைகளைப் பின்பற்றுங்கள், நல்ல பலன்களைப் பெறும் வழியில் நீங்கள் இட்டுச் செல்லப் படுவீர்கள். தெய்வக் கட்டளைகளை நம்பிக்கை மற்றும் சிரத்தையுடன் பற்றி ஒழுகுங்கள். அது, வாழ்க்கையின் குறிக்கோளை நீங்கள் உணருவதற்கு உதவும். ஒவ்வொரு செயலுக்கும் அதற்குத் தகுந்த எதிர்மறைச் செயல் இருப்பதால், தீய நோக்கங்கள், கொடிய வார்த்தைகள், மற்றவர்களுக்கும், அதனால் உங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் ஆகியவற்றைப் பற்றி எச்சரிக்கையுடன் இருங்கள். நீங்கள் நல்லவற்றின் பாதையை எப்போதும் பின்பற்றி, நல்ல பலன்களை வாழ்க்கையில் பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒவ்வொரு ஜீவராசியையும், நடமாடும் தெய்வக் கோவில்களாக நீங்கள் மதிக்கும் வண்ணம், நன்றாக வாழுங்கள்.
தெய்வத்தை தியானிப்பது ஒன்றே, புலன்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்வதற்கான ஒரே வழி - பாபா