azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 12 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 12 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

In Indian mythology, there is an accountant in the court of Yama (the King of Death) by name Chitragupta (the name means ‘secret picture’). Chitragupta maintains a register of the good and bad done by each living being, and on the death of that person, he brings the books to the court and strikes the balance between debit and credit. Yama, the king then metes out the punishment that can expiate and educate. This Chitragupta’s office is actually in the mind of every human, all the time awake and alert! What Chitragupta does is to 'picture' all the secret promptings that blossom into activity; he notes the warning signals as well as the occasions when those signals were ignored or wantonly disregarded. Beware! You must see that the warning of the Divine against the merely human, or even the bestial inclinations are always heeded! (Divine Discourse, Feb 24, 1971)
CONSTANT REFLECTION ON THE GLORY OF GOD HELPS TO
TRANSMUTE THE BODY, MIND AND SPIRIT - BABA
இந்திய இதிஹாசத்தின் படி, யமனின் சபையில் சித்ரகுப்தன் ( இரகசிய படம் என்று பொருள்) என்ற ஒரு கணக்குப் பிள்ளை இருப்பார். சித்ரகுப்தன் ஒவ்வொரு ஜீவராசியும் செய்த நல்லவை மற்றும் தீயவைகளைப் பற்றிய ஒரு கணக்குப் புத்தகத்தை வைத்திருப்பார்; அந்த மனிதனின் இறப்பிற்குப் பிறகு அந்த கணக்கை சபைக்குக் கொண்டு வந்து, நல்லவை மற்றும் கெட்டவைக்கும் இடையில் கணக்கை சரிக் கட்டுவார். யமராஜன் பின்னர் பரிகாரமும், பாடமும் தரும் தண்டனையை அளிப்பார்.இந்த சித்ரகுப்தனின் அலுவலகம், உண்மையில் , ஒவ்வொரு மனிதனின் மனதில் தான், எப்போதும் விழிப்புடனும், கவனத்துடனும், இருக்கிறது! ‘’ சித்ர குப்தன்’’ செய்வதெல்லாம், செயல்பாடுகளாக மலரும் அனைத்து உந்துதல்களையும் படம் பிடிப்பது தான்; அவர், எச்சரிக்கைகளையும், அந்த எச்சரிக்கைகளை கவனிக்காமலும் அல்லது வேண்டும் என்றே உதாசீனப் படுத்தும் சந்தர்ப்பங்களையும், குறித்துக் கொள்கிறார். ஜாக்கிரதை !வெறும் மனித அல்லது ஏன் மிருகத் தனமான நாட்டங்களுக்கும் எதிராக, தெய்வத்தின் எச்சரிக்கைக்கு எப்போதும் செவி சாய்க்க வேண்டும் என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்!
இடையறாது, இறைவனின் மாட்சிமையை தியானிப்பது, உடல், மனம் மற்றும் ஆத்மாவின் இயல்பை பண்படுத்த உதவுகிறது - பாபா