azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 10 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 10 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Little minds with no faith may argue that God cannot come as a human being. Man can never describe or delineate the formless and the attributeless, the one beyond qualities. It is only by means of form and attributes that one can pray, adore, worship or even feel the Divine presence. In fact God can be recognised only as human by man, and this is explained in scriptures, "Daivam manusha rupena, God revealed through human form". Hence since time immemorial, God is adored, worshipped and even imagined or pictured by man only in human form, so long as the consciousness as man persists. People easily visualise God as a human, with superhuman or supra-human power, wisdom, love, and compassion. God’s Grace can make the blind see, lame walk and dumb speak. By a mere touch, God can demolish the sins of the past and erect the basis for peace and joy. (Divine Discourse, Jul 27, 1980.
IF YOU WIN THE GRACE OF THE LORD,
EVEN THE DECREES OF DESTINY CAN BE OVERCOME - BABA
தெய்வ பக்தி அற்ற, குறுகிய மனம் படைத்தவர்கள் தெய்வம் ஒரு மனித ரூபத்தில் வர முடியாது என வாதிக்கக் கூடும். நிர்குண, நிராகார, குணாதீதனான இறைவனை, மனிதன் ஒரு போதும் வர்ணிக்கவோ அல்லது சித்தரிக்கவோ முடியாது. ரூபம் மற்றும் குணங்களின் மூலம் தான் ஒருவர் பிரார்த்திக்கவோ, போற்றவோ, தொழவோ அல்லது ஏன் தெய்வம் இருப்பதை உணரவோ முடியும். மனிதனால், தெய்வத்தை மனித உருவில் தான் உணர முடியும்; இதைத் தான் வேதங்கள், ‘’ தெய்வம் மானுஷ்ய ரூபேனா , தெய்வம் மனித வடிவில் வெளிப்படுகிறது ‘’ என்று விளக்குகின்றன. எனவே, தொன்று தொட்டே, தான் மனிதன் என்ற உணர்வு இருக்கும் வரை,தெய்வம், மனிதனால், மனித உருவில் மட்டுமே, போற்றப்பட்டு, வழிபடப் பட்டு,ஏன் கற்பனை செய்யப்பட்டு அல்லது சித்தரிக்கப் பட்டு வந்துள்ளது.மனிதர்கள், தெய்வத்தை அமானுஷ்யமான வலிமை, ஞானம்,ப்ரேமை மற்றும் கருணை கொண்ட ஒரு மனிதனாக எளிதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள்.தெய்வத்தின் அருளால், குருடனைப் பார்க்க வைக்கவும், முடவனை நடக்க வைக்கவும், ஊமையைப் பேச வைக்கவும் முடியும். வெறும் ஒரே ஒரு ஸ்பரிசத்தினால், இறைவன், கடந்த கால பாவங்களைத் தூள்தூளாக்கி, சாந்தி, சந்தோஷங்களுக்கான ஆதாரத்தை நிலை நாட்ட வல்லவனாவான்.
நீங்கள் தெய்வ அருளைப் பெற்று விட்டால்,
தலைவிதியைக் கூட வென்றிட முடியும்- பாபா