azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 08 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 08 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Every being must attain fulfilment; that is the destiny, however hard and long be the journey. When and how are determined by the cumulative effects of many lives. Do not forget, the effects are shaped not only by your actions but even more by the motives that induce action. Everyone builds his own fortune or misfortune. Your present condition is the consequence of past actions and motives. That said, can you assert that in this journey, others are superfluous, that one need not and should not seek help from another? No! In order to attain fulfilment in spirituality, the guidance of those who mastered the path is essential. Logic can develop only skill and cleverness. Experience achieved through intuition alone is valid. From intuition to attain illumination, layers of egoism and its evils must be penetrated and destroyed. He who has reached the goal can alone guide the pilgrim to it. A Guru will be of great help in this journey! (Divine Discourse, Jul 27, 1980)
OBEY THE GURU, FOLLOW HIS INSTRUCTIONS, PROGRESS ALONG THE SPIRITUAL PATH,
THIS IS THE REAL “PADA PUJA” TO HIM !- BABA
ஒவ்வொரு ஜீவராசியும் பரிபூரணத்துவத்தை அடைந்தே ஆக வேண்டும்; பயணம் எவ்வளவு கடினமாகவோ,நீண்டதாகவோ இருந்தாலும் கூட,அதுவே அவர்களது விதியாகும்.எப்போது , எவ்வாறு என்பதெல்லாம்,பல ஜன்மங்களின் ஒட்டு மொத்த விளைவுகளைப் பொறுத்தே இருக்கும்.விளைவுகள், உங்களது செயல்களினால் மட்டுமே அன்றி, அதற்கும் மேலாக, அந்த செயல்களை உந்தும் உத்தேசங்களினால் உருவாக்கப் படுகின்றன என்பதை மறந்து விடாதீர்கள். ஒவ்வொருவரும் தங்களது சொந்த அதிர்ஷ்டம் அல்லது துரதிருஷ்டத்தை உருவாக்குகிறார்கள்.உங்களது தற்கால நிலை, கடந்த காலத்தின் செயல்கள் மற்றும் உத்தேசங்களின் பலனே. அப்படி இருந்தாலும்,இந்தப் பாதையில், மற்றவர்கள் எல்லாம் தேவையற்றவர்கள்; ஒருவர், மற்றவரிடமிருந்து உதவியை நாடத் தேவையில்லை என்றோ, தேடக்கூடாது என்றோ நீங்கள் சாதிக்க முடியுமா? இல்லை ! ஆன்மீகத்தில் பூரணத்துவத்தை அடைய,இந்தப் பாதையில் நிபுணத்துவத்தை அடைந்தவர்களின் வழிகாட்டுதல் அத்தியாவசியம். தர்க்கம், திறமை மற்றும் புத்திசாலித்தனத்தை மட்டுமே வளர்க்க முடியும். உள்ளுணர்வின் மூலம் பெற்ற அனுபவம் மட்டுமே சரியானதாகும். உள்ளுணர்விலிருந்து, தன்னை உணர்தல் என்ற நிலையைப் பெற,அஹங்காரம் மற்றும் அதன் தீமைகளின் பல அடுக்குகளை ஊடுருவி, அழித்தாக வேண்டும். குறிக்கோளை அடைந்த ஒருவரால் மட்டுமே,அந்தப் பாதையில் வரும் யாத்திரீகருக்கு, அதற்கான வழியைக் காட்ட முடியும். இந்தப் பயணத்தில், ஒரு குரு மிகச் சிறந்த உதவி அளித்திடுகிறார் !
குருவைப் பணிந்து, அவரது கட்டளைகளைப் பின்பற்றி,
ஆன்மீகப் பாதையில் முன்னேறுங்கள். இதுவே அவருக்கு நீங்கள் செய்யும் உண்மையான ‘’ பாத பூஜை’’ ஆகும் - பாபா