azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 06 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 06 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
True devotion consists not in merely chanting the name of Rama (the Lord) but in rendering help to the society and serving the needy. Only then can you become worthy of God's grace. Hanuman exemplified the ideal of implicit obedience to God's injunctions. True devotees should give no room for doubt. They must act with full faith in God. They must realise that everything belongs to God and should give up all senses of ‘I’ and ‘mine’. There is a basic difference between the attitude of the Gopikas (the simple cowherd womenfolk) towards Krishna and that of Yadavas of Dwaraka (relatives of Krishna). The Gopikas felt: "Krishna! We are Yours". While the Yadavas felt: "Krishna! You are ours." Their attitude was based on Ahamkara (sense of ego). That was responsible for their ultimate destruction. (Divine Discourse, Jan 23, 1997)
FORGIVENESS IS A VERY IMPORTANT QUALITY. IT IS TRUTH, IT IS DHARMA, IT IS NON-VIOLENCE, IT IS VEDA, IT IS HAPPINESS: INDEED IT IS HEAVEN ITSELF - BABA
உண்மையான பக்தி என்பது வெறும் இறை நாமத்தை ஜபிப்பதில் மட்டும் இல்லை; ஆனால் சமுதாயத்திற்கு உதவி செய்வதிலும், தேவைப்படுவோர்களுக்கும் சேவை செய்வதிலும் தான் இருக்கிறது. அதன் பிறகே, நீங்கள் தெய்வ அருளுக்குப் பாத்திரமாகிறீர்கள். ஹனுமான் தெய்வத்தின் ஆணைகளுக்கு, உள்ளார்ந்த கீழ்ப்படிதல் என்ற இலட்சியத்தின் முன் உதாரணமாகத் திகழ்கிறார். உண்மையான பக்தர்கள் சந்தேகங்களுக்கு இடம் அளிக்கக் கூடாது.அவர்கள் முழு தெய்வ நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். அவர்கள், அனைத்தும் தெய்வத்தினுடையதே என்பதை உணர்ந்து,’’ நான்’’, ‘’ எனது’’ என்ற அனைத்து உணர்வுகளையும் விட்டு விட வேண்டும். கோபிகைகள் ( எளிமையான இடைச்சியர்கள்) மற்றும் யாதவர்கள்( ஸ்ரீகிருஷ்ணரது உறவினர்கள்), கிருஷ்ணரின் பால் கொண்டிருந்த மனப்பாங்கில் ஒரு அடிப்படை வித்தியாசம் உள்ளது. கோபிகைகள்,‘’ கிருஷ்ணா, நாங்கள் உங்களுடையவர்கள் ‘’ என்ற உணர்வுடன் இருந்தார்கள். அதே சமயம், யாதவர்கள், ‘’ கிருஷ்ணா ! நீ எங்களுடையவன் ‘’ என்று நினைத்தார்கள். அவர்களது எண்ணம் அஹங்காரத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. அதுவே, இறுதியில், அவர்களது அழிவுக்குக் காரணமாக அமைந்தது.
மன்னிப்பது என்பது ஒரு முக்கியமான குணம். அதுவே சத்தியம், அதுவே தர்மம், அதுவே அஹிம்சை, அதுவே வேதம், அதுவே சந்தோஷம். உண்மையில் அதுவே சொர்க்கம் - பாபா