azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 04 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 04 Jul 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Sun is the natural source of light. Human life is impossible without Sunlight. Sunlight is the cause for rains which enable crops to grow. Sun is also the source of health and happiness. Similarly, Right conduct (Dharma) is the Sunlight that illumines the entire Universe. The word Dharma means ‘that which upholds’. It is Dharma which teaches the right relationship between two individuals and between societies. Dharma reveals to every being, through their hearts, what is right and wrong, what is true and false. It is righteousness which promotes the wellbeing of societies. It is the protector of universal wellbeing. The Universe cannot be sustained without Dharma. A man of wisdom is more powerful than a physically strong man, just as a puny mahout is able to control an elephant. It is not enough for people to rely on physical strength alone. (Divine Discourse, Jan 23, 1997)
DHARMA DESTROYS THE ONE WHO VIOLATES IT. DHARMA ALSO PROTECTS THE ONE WHO PROTECTS IT - BABA
சூரியனே ஒளியின் இயற்கையான மூலாதாரமாகும்.சூரிய ஒளி இன்றி மனித வாழ்க்கை இருக்க இயலாது.பயிர்கள் வளர்வதற்குத் தேவையான மழைக்குக் காரணமும் சூரிய ஒளியே.சூரியனே ஆரோக்கியம் மற்றும் ஆனந்தத்திற்கும் மூலாதாரமாகும்.அதைப் போலவே, தர்மமே, இந்த பிரபஞ்சம் அனைத்தையும் பிரகாசிக்கச் செய்யும் சூரிய ஒளியாகும். தர்மம் என்ற வார்த்தைக்கு ‘’ நிலை நிறுத்துவது எதுவோ அது ‘’ என்று பொருளாகும். இரண்டு தனி மனிதர்கள் மற்றும் சமுதாயங்களுக்கு இடையே இருக்க வேண்டிய சரியான உறவு முறையை போதிப்பது தர்மமே. தர்மமே, ஒவ்வொரு ஜீவராசிக்கும் அவற்றின் இதயத்தின் மூலம், எது சரி , எது தவறு, எது உண்மை, எது பொய் என்பதை எடுத்துக் காட்டுகிறது. தர்மமே, சமுதாயங்களின் நலனைப் பேணிக் காக்கிறது. லோகக்ஷேமத்தைக் காப்பதும் அதுவே.தர்மம் இன்றி இந்த பிரபஞ்சத்தைத் தாங்கி நிறுத்த முடியாது. ஒரு ஒல்லியான பாகனால், ஒரு யானையையேக் கட்டுப்படுத்த முடிவதைப் போல, ஞானமுள்ள ஒரு மனிதன், உடல் பலம் வாய்ந்த ஒருவனை விட, அதிக சக்தி படைத்தவன்.உடல் பலத்தை மட்டுமே நம்பி இருப்பது மனிதர்களுக்குப் போதுமானதல்ல.
தர்மம், அதை மீறும் ஒருவரை அழித்து விடுகிறது.
தர்மம், அதைக் காக்கும் ஒருவரை, காக்கவும் செய்கிறது. பாபா