azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 25 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 25 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Islam means surrender to God. It teaches that God's Grace can be won through justice and righteous living; and not through wealth, scholarship or power. All who in a spirit of surrender and dedication, live in peace and harmony in society are in fact, followers of Islam. Islam insists on full co-ordination between thought, word and deed. Muslim holy men and sages have been emphasizing the need to inquire into the validity of the 'I' which feels it is the body and the 'I' which feels it is the mind, and reach the conclusion that the real 'I' is the self yearning for the Omni Self, God. During the Ramzan month, the fast and the prayers are to awaken and manifest this realisation. No matter which religion you follow, remember that the emphasis should be on unity, harmony and equal-mindedness. Therefore cultivate love, tolerance and compassion, and demonstrate this Truth in daily activity. This is the message I give you with My blessings. (Divine Discourse, July 12, 1983)
YOUR LIFE MUST BE BASED ON THE PRINCIPLE OF SURRENDER TO THE DIVINE - BABA
‘’இஸ்லாம்’’ என்றால், தெய்வத்திடம் சரணாகதி அடைவது என்பது பொருள். தெய்வ அருளை, பணம்,பாண்டித்யம் அல்லது பலத்தின் மூலம் அன்றி, நியாயமாக, தார்மீகமாக வாழ்வதன் மூலம் பெறலாம் என்று, அது போதிக்கிறது. சரணாகதி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன், சாந்தி மற்றும் இசைவுடன் வாழும் அனைவருமே, உண்மையில், இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களே. இஸ்லாம், சிந்தனை, சொல் மற்றும் செயலின் இடையில் முழுமையான ஒருங்கிணைப்பை வலியுறுத்துகிறது. முஸ்லீம் பெருமக்களும், ஆன்றோர்களும், தானே உடல் என்றும் , தானே மனம் என்றும் எண்ணும் ‘’ நான்’’, என்பதின் ஏற்புடமையை ஆராய்ந்து, உண்மையான ‘’ நான்’’ என்பது எங்கும் நிறைந்துள்ள தெய்வத்திற்காக, ஜீவாத்மா கொள்ளும் ஏக்கமே என்ற முடிவிற்கு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளார்கள். ரம்ஜான் மாதத்தில் மேற்கொள்ளப் படும் உபவாசம் மற்றும் பிரார்த்தனைகள் இந்த உணர்வைத் தட்டி எழுப்பி, வெளிப்படுத்துவதற்காகவே. நீங்கள் பின்பற்றும் மதம் எதுவாயினும், ஒற்றுமை, இசைவு மற்றும் சமபாவ உணர்வு ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, ப்ரேமை,சகிப்புத் தன்மை மற்றும் கருணையை வளர்த்துக் கொண்டு, இந்த சத்தியத்தை உங்களது அன்றாட வாழ்க்கையில் எடுத்துக் காட்டுங்கள். இதுவே, எனது ஆசிகளுடன் நான் உங்களுக்கு வழங்கும் அறிவுரையாகும்.
உங்கள் வாழ்க்கை தெய்வத்திடம் பரிபூரண சரணாகதி அடையும் கோட்பாட்டை ஆதாரமாகக் கொண்டு இருக்க வேண்டும் - பாபா