azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 23 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 23 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Today science has advanced to a great extent! Human beings have undertaken space travel. People want to know what is there in space, they are curious to know what is there in the moon and even wish to travel to the Sun. But what is the use? First recognise the Divinity within yourself. Open the doors of your heart. Develop love more and more. Understand the truth. Experience God. There lies the bliss. It is very easy to know God, but very few understand this. You must make every effort to understand the immanent Divinity. The divinity within is covered by ego and anger. Therefore, it is said, real knowledge dawns only when attachment is destroyed (Moham hithva punar vidya). Where does this attachment come from? Excessive desires lead to attachment. You will experience divinity everywhere when you enquire deep within! (Divine Discourse Mar 14, 1999)
WITHOUT FIRM FAITH IN THE OMNIPRESENCE OF THE DIVINE,DEVOTION HAS NO MEANING - BABA
இன்று விஞ்ஞானம் ஒரு மகத்தான அளவு முன்னேறி உள்ளது.மனிதர்கள் வெளி வானில் பயணம் செய்கிறார்கள்.மனிதர்கள், விண்வெளியில் என்ன உள்ளது என்பதை அறிய விரும்புகிறார்கள் ;சந்திரனில் இருப்பதைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்; ஏன் சூரியனுக்குக் கூட பயணம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், என்ன பயன்? முதலில் உங்களுள் உள்ள தெய்வீகத்தை உணருங்கள்.உங்களது இதயத்தின் கதவுகளைத் திறவுங்கள். ப்ரேமையை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள். சத்தியத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தெய்வத்தை அனுபவியுங்கள்.அதில் தான் பேரானந்தம் இருக்கிறது. தெய்வத்தைத் தெரிந்து கொள்ளுவது என்பது மிகவும் எளிது; ஆனால் வெகு சிலரே இதைப் புரிந்து கொள்ளுகிறார்கள். உள்ளுறையும் தெய்வீகத்தைப் புரிந்து கொள்ள நீங்கள் எல்லா முயற்சியையும் எடுக்க வேண்டும். உள்ளுறையும் தெய்வீகம், அஹங்காரம் மற்றும் கோபத்தினால் மூடப்பட்டுள்ளது. அதனால் தான்,உண்மையான ஞானம், பற்றினை அழிக்கும்போது மட்டும் தான் உதயமாகிறது (மோஹம் ஹித்வா புனர் வித்யா) என்று கூறப்படுகிறது.இந்தப் பற்றுதல் எங்கிருந்து வருகிறது? அளவுக்கு மீறிய ஆசைகளே, பற்றுதலுக்கு இட்டுச் செல்கின்றன. நீங்கள், உங்களுள் ஆழ்ந்து ஆராய்ந்தால், தெய்வீகத்தை எங்கும் அனுபவிப்பீர்கள் !
தெய்வம்,அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளது என்பதில் உறுதியான நம்பிக்கை இல்லை எனில், பக்திக்கு அர்த்தமே இல்லை - பாபா