azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 22 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 22 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Think for a while, what benefit will you gain by listening to gossip and talking unnecessarily about unsacred things? Nothing! In fact, you will be polluting your heart in the process. All that you see and hear gets imprinted on your heart. Once your heart is polluted, your life will become meaningless. The other day, while speaking to the devotees from Visakhapatnam, I quoted this example: “Human heart is like a pen. The colour of the words that you write will be the same as the colour of the ink in the pen.” Hence, teach your ears to listen to the stories of the Lord instead of listening to vain gossip. Only when you fill your heart with selfless love, all that you think, say and do will be suffused with love. Remember, God expects you to fill your heart with love and lead a sacred life. - Divine Discourse, Aug 22, 2000.
KEEP AWAY FROM IMPURE LISTENING,IMPURE ACTS,
IMPURE WORDS AND IMPURE THOUGHTS - BABA
ஒரு கணம் எண்ணிப் பாருங்கள் ; புனிதமற்ற விஷயங்களைப் பற்றித் தேவையில்லாமல் பேசுவதாலும், வதந்திகளைக் கேட்பதாலும், உங்களுக்கு என்ன பயன் கிடைக்கிறது ? எதுவும் இல்லை ! உண்மையில் இதைச் செய்யும் போது, நீங்கள், உங்கள் இதயத்தை மாசு படுத்திக் கொள்வீர்கள்.நீங்கள் காணும், கேட்கும் யாவும் உங்கள் இதயத்தில் பதிந்து விடுகின்றன. ஒருமுறை உங்கள் இதயம் மாசடைந்து விட்டால், உங்கள் வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடும். சில நாட்கள் முன்பு,விசாகப் பட்டினத்திலிருந்து வந்த பக்தர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, நான், இந்த உதாரணத்தைக் கூறினேன், ‘’ மனித இதயம் ஒரு பேனாவைப் போன்றது. நீங்கள் எழுதும் எழுத்துக்களின் வண்ணமும், அந்தப் பேனாவில் உள்ள மையின் வண்ணமும் ஒன்றாகவே இருக்கும் ‘’. எனவே, உங்கள் செவிகளை, வெட்டிப் பேச்சுக்களுக்கு பதிலாக, தெய்வத்தைப் பற்றிய கதைகளைக் கேட்பதற்குக் கற்றுக் கொடுங்கள். உங்கள் இதயத்தை தன்னலமற்ற ப்ரேமையினால் நிரப்பினால் தான், உங்களது சிந்தனை, சொல் மற்றும் செயல் அனைத்தும் ப்ரேமையில் தோய்ந்திருக்கும். உங்கள் இதயத்தை ப்ரேமையினால் நிரப்பி ,ஒரு புனிதமான வாழ்க்கையை நீங்கள் நடத்த வேண்டும் என்று இறைவன் எதிர்பார்க்கிறான்.
தூய்மையற்றதைக் கேட்பது,தூய்மையற்ற செயல்கள்,
தூய்மையற்ற வார்த்தைகள் மற்றும் தூய்மையற்ற சிந்தனைகள்
ஆகியவற்றிலிருந்து விலகி இருங்கள் - பாபா