azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 12 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 12 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Today, physical comfort, individual advancement and personal progress are held as desirable goals. Though everyone cares about themselves only, nobody can live in isolation. Suppose one is sitting at a dinner table with sumptuous food served. If he learns at that time that his child is injured in a road-accident, won’t he rush to the road, without caring for hunger and delicious food? The call of loved ones is louder and stronger than any call from within. Despite this fact, people continue to believe in their ego, in exclusive individuality. The family is essential for the blossoming of human personality. For homes to flourish, a community is needed to keep it safe and happy. When the activities of safeguarding or sustaining society is rendered weak, families tend to disintegrate and individuals suffer! So you must share your knowledge, empathy, and love with one and all. (Divine Discourse, Feb 4, 1973)
EXPANSION IS LIFE. EXPANSION IS LOVE ! - BABA
இந்நாளில், உடல் சௌகரியங்கள்,தனி மனித மேம்பாடு,தனிப்பட்ட முன்னேற்றம் ஆகியவையே விரும்பத் தக்க குறிக்கோள்களாகப் போற்றப் படுகின்றன.ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி மட்டுமே கவனித்துக் கொண்டாலும், எவரும் தனிமையில் இருக்க இயலாது.ஒருவர் தனக்கு முன் அறுசுவை விருந்து படைக்கப் பட்டு , அதைச் சாப்பிடுவதற்காக அமர்ந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமயம், அவரது குழந்தை ஒரு சாலை விபத்தில் அடிபட்டு விட்டான் என்பதை அறிந்தால், உடனேயே அவர், தனது பசி அல்லது அறுசுவை உணவைப் பற்றிக் கவலைப் படாமல், பதறி அடித்துக் கொண்டு, அந்த சாலைக்கு ஒடமாட்டாரா?தனக்குப் பிரியமானவரின் அறைகூவல், தனக்குள் இருந்து எழும் எந்த அறைகூவலையும் விட வலிமையானதாகும். இந்த உண்மைக்குப் பிறகும், மனிதர்கள் தங்கள் அஹங்காரம் மற்றும் தனித் தன்மையில் நம்பிக்கை வைக்கிறார்கள். மனிதனின் ஆளுமை மலருவதற்கு குடும்பம் அத்தியாவசியமானதாகும்.ஒரு குடும்பம் வளமோடு வாழவும், அதைப் பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் வைக்கவும் ஒரு சமூகம் தேவை.ஒரு சமுதாயத்தைப் பாதுகாத்துப் பேணும் செயல்கள் பலஹீனமடைந்தால், குடும்பங்கள் சிதைந்து, தனி மனிதர்கள் துன்பமடைவார்கள் ! எனவே,நீங்கள் உங்களது அறிவு,பரிவு மற்றும் ப்ரேமையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
விரிவாக்கமே வாழ்க்கை. விசாலமடைவதே ப்ரேமை !- பாபா