azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 10 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 10 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Recognizing the supremacy of action, you must see that everything you do is pure and holy. Action is not limited to what you do with your hands. What you hear, what you see, what you speak and even what you think — all of these constitute action. This means that the things you see, the words you hear, the thoughts you think and the words you speak must all be pure. All that you take in through your five senses should be wholesome and pure! Only then can you have a ‘satvic’ (pure) nature. Devotion should not be confined to bhajans or exhibiting a yearning for Swami. You are the architect of your own destiny. Fill every one of your actions with devotion, suffuse them with righteousness and dedicate them to the Divine. If you follow this, your life will become sanctified and you may not have a rebirth at all. This is My benediction to all of you. (Divine Discourse, Feb 21, 1988)
DEVOTION TO THE DIVINE GRANTS YOU BLISS,PROSPERITY AND PEACE - BABA
கர்மாவின் உயர்ந்த நிலையை உணர்ந்து, நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் பரிசுத்தமானதாகவும், புனிதமானதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கர்மா என்பது நீங்கள் கரங்களால் செய்வது மட்டுமல்ல. நீங்கள் கேட்பது, காண்பது, ஏன் நீங்கள் சிந்திப்பது - இவை அனைத்தும் கர்மாவே. இதன் பொருள், நீங்கள் காணும் பொருட்கள்,நீங்கள் கேட்கும் வார்த்தைகள், நீங்கள் சிந்திக்கும் எண்ணங்கள், நீங்கள் பேசும் சொற்கள் அனைத்தும் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.உங்களது ஐம்புலன்களின் வழியாக நீங்கள் உள் வாங்கிக் கொள்ளும் அனைத்தும் ஆரோக்யமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்க வேண்டும் ! அதன் பிறகே, நீங்கள் ஸத்வ குணம் உடையவராக இருக்க முடியும். பக்தி என்பது பஜனைகள் செய்வது அல்லது சுவாமிக்கான ஒரு ஏக்கத்தை வெளிப்படுத்துவது என்பதோடு நின்று விடக் கூடாது. உங்களது தலைவிதியை நிர்ணயிப்பவர் நீங்களே. உங்களது ஒவ்வொரு செயலையும் பக்தியால் நிரப்பி, தர்மத்தில் தோய்த்து அவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள்.இதை நீங்கள் பின்பற்றினால், உங்கள் வாழ்க்கை புனிதமடையும்; உங்களுக்கு ஒரு மறுபிறவியே கிடையாது. இதுவே உங்கள் அனைவருக்கும் எனது ஆசிகள்.
இறைவன் பால் கொள்ளும் பக்தி உங்களுக்கு
ஆனந்தம்,வளமை மற்றும் சாந்தியை அளிக்கிறது - பாபா