azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 05 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 05 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Develop the quality of forgiveness (Kshama) and refrain from harshness in speech. You must realise that if you give up forbearance and forgiveness, you will have no peace. Whatever anyone may do to you, do not bother about it. What is it you lose on account of their ill behavior? If you resort to retaliation, you will only worsen your condition! You have no idea either of your strength or weakness. Face such situations bravely and do not allow yourself to be agitated over them. You must win over the other by your forbearance. Make forbearance your life-breath and your ideal. You all have the sweet essence of kindness, peace and compassion in you abundantly. With God’s grace, you are free from grief and bad qualities – Do not let them in! Foster the spirit of kindness and love. Treat life as a game and emerge victorious by leading an ideal-filled life. This is the victory you must achieve! (Divine Discourse Jan 14, 1997)
LIFE IS A CHALLENGE, MEET IT ! LIFE IS GAME PLAY IT ! LIFE IS LOVE, ENJOY IT ! - BABA
மன்னிக்கும் குணத்தை (க்ஷமா) வளர்த்துக் கொண்டு, பேச்சில் கடுமையைத் தவிர்த்து விடுங்கள்.சகிப்புத் தன்மையையும், மன்னிக்கும் குணத்தையும் நீங்கள் விட்டு விட்டால், உங்களுக்கு சாந்தி இருக்காது என்பதை நீங்கள் உணர வேண்டும். எவர் உங்களுக்கு எதைச் செய்தாலும், அதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களது தீய நடத்தையால், நீங்கள் எதை இழக்கிறீர்கள்? நீங்கள் அதை எதிர்த்தால் , உங்கள் நிலைமையை நீங்கள் இன்னும் மோசமானதாகவே ஆக்கி விடுவீர்கள் ! உங்களது பலத்தைப் பற்றியோ அல்லது பலஹீனத்தைப் பற்றியோ உங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த சந்தர்ப்பங்களை தைரியமாக எதிர் கொண்டு, அவைகளைப் பற்றி நீங்கள் கலக்கம் அடையாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.உங்களது சகிப்பத் தன்மையின் மூலம் பிறரை நீங்கள் வெல்ல வேண்டும். சகிப்புத் தன்மையை உங்களது உயிர் மூச்சாகவும், இலட்சியமாகவும் கொள்ளுங்கள். உங்கள் அனைவரிடமும், பரிவு, சாந்தி மற்றும் கருணையின் சாரம் அபரிமிதமாக உள்ளது. இறைவனது அருளால், நீங்கள் துக்கமும், தீய குணங்களும் அற்று இருக்கிறீர்கள் – அவைகளை உள்ளே விட்டு விடாதீர்கள் ! பரிவு மற்றும் ப்ரேமை உணர்வைப் பேணுங்கள். வாழ்க்கையை ஒரு விளையாட்டுப் போட்டியாகக் கருதி, ஆதர்ச மயமான வாழ்க்கை நடத்துவதன் மூலம் அதில் வெற்றி காணுங்கள். நீங்கள் கட்டாயம் பெற வேண்டிய வெற்றி இதுவே !
வாழ்க்கை ஒரு சவால், அதை எதிர் கொள்ளுங்கள் ! வாழ்க்கை ஒரு விளையாட்டு, அதை விளையாடுங்கள் ! வாழ்க்கை ப்ரேமையே, அதை அனுபவியுங்கள் ! - பாபா