azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 03 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 03 Jun 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Education must assume full responsibility and impact students’ moral and spiritual life. Imparting technical skills and worldly information alone is not enough; moral and spiritual education must supplement them. People pay huge attention today only to their own selfish interests. This must change. Your attitude must be not what you can get from others, but what you can give to others – make that your focus! The idea that a posh bungalow with expensive furniture, exquisite dining table or a heavy pay package from abroad is the ideal to be worked for should be given up. This ideal breeds evil. Inspire youth to set as their ideal - hands dedicated to hard work, heads dedicated to service and hearts dedicated to compassion. Your goal must be that no one should suffer harm or pain through your words or deeds. For when another is hurt by us, what really happens is insult and injury to our own true human nature. (Divine Discourse, Mar 8, 1981)
கல்வி முறை என்பது மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். பொறியியல் திறன்கள் மற்றும் உலகியலான விஷயங்களைக் கற்றுத் தருவது மட்டுமே போதாது;ஒழுக்கம் மற்றும் ஆன்மீகக் கல்வியையும் அவற்றுடன் சேர்த்து அளிக்க வேண்டும்.மனிதர்கள் இன்று தங்களது சொந்த சுயநலத் தேவைகளில் மட்டும் தான் அபரிமிதமான கவனத்தைச் செலுத்துகிறார்கள். இது மாற வேண்டும்.உங்களது மனப்பாங்கு, மற்றவர்களிடமிருந்து எதைப் பெறலாம் எனபதில் இல்லாமல், மற்றவர்களுக்கு என்ன அளிக்கலாம் என்பதில் இருக்க வேண்டும்- அதையே உங்களது குறிக்கோளாக ஆக்கிக் கொள்ளுங்கள் ! விலையுயர்ந்த இருக்கைகள் கொண்ட ஆடம்பரமான மாளிகை, மிக அழகான உணவருந்தும் மேஜை அல்லது ஒருமிக அதிகமான வெளிநாட்டுச் சம்பளம் என்ற இலட்சியத்திற்காகவே உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட வேண்டும்.இந்த இலட்சியம் தீங்கைத் தான் விளைவிக்கிறது.கடின உழைப்பிற்கு அர்ப்பணிக்கப் பட்ட கைகள், சேவைக்கு அர்ப்பணிக்கப் பட்ட சிந்தனை,கருணைக்கு அர்ப்பணிக்கப் பட்ட இதயங்கள் என்பதை தங்களது இலட்சியமாகக் கொள்ளுமாறு இளைஞர்களை ஊக்குவியுங்கள்.உங்களது சொற்கள் அல்லது செயல்களினால் எவரும் துன்பப் படவோ அல்லது வேதனைப் படவோ கூடாது என்பதே உங்களது குறிக்கோளாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் நம்மால் துன்பப் படும் போது, நமது சொந்த இயல்பிற்கே அவமானமும், காயமும் தான் உண்மையில் ஏற்படுகிறது.