azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 30 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 30 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

The core of this Universe is the Supreme Self (Paramatma). We can describe the Universe but the Supreme Self is beyond all description. Both the cognisable and the non-cognisable have emanated from the same One Indivisible Consciousness. Each is full and complete in itself. The individual consciousness is the manifestation of the Cosmic Consciousness. When the material sheath falls off, it merges in its source. The Vedas declare, “This is full, that is full. From the full emerges the full. When the Full is taken from the full, the full remains full”. So the Cosmos, the World, the Individual - all are embodiments of the Full. Nothing is fractional or incomplete. Hence all is indeed Divine. But this awareness of the immanence of the Universal can come to your experience when the ‘I’ consciousness is forgotten. When the ‘I’ in you disappears, you automatically become fit to know the ‘non-I’. (Divine Discourse, Apr 5, 1981)
JUST AS THERE IS OIL IN THE SESAME SEED,BUTTER IN MILK,FRAGRANCE IN FLOWER, TASTY JUICE IN THE FRUIT AND FIRE IN WOOD, THERE IS DIVINITY IN THE VAST UNIVERSE - BABA
பிரபஞ்சத்தின் கருவூலம் பரமாத்மாவே.நாம் இந்த பிரபஞ்சத்தை வர்ணிக்க முடியும்; ஆனால் பரமாத்மா வர்ணனைகளுக்கும் எல்லாம் அப்பாற்பட்டவர்.அசைபவை, அசையாதவை என்ற இரண்டுமே அந்த ஒரே பகுக்க முடியாத பரமாத்மாவிலிருந்தே தோன்றியவையே. ஒவ்வொன்றும் முழுமையானதும் பரிபூரணமானதும் ஆகும்.ஜீவாத்மா, பரமாத்மாவின் வெளிப்பாடே. பொருட்களாலான வெளியுறை விழுந்து விட்டால், அது தனது மூலாதாரத்துடன் ஒன்றரக் கலந்து விடுகிறது. வேதங்கள், ‘’இதுவும் பூரணமே. அதுவும் பூரணமே. பூரணத்திலிருந்து பூரணம் உருவாகிறது. பூரணத்திலிருந்து, பூரணத்தை எடுத்து விட்டால், அதுவும் பூரணமாகவே இருக்கிறது ‘’ என்று பறைசாற்றுகின்றன. அதைப் போலவே, இந்த பிரபஞ்சம், உலகம், ஜீவாத்மா- அனைத்துமே பூரணத்தின் திருவுருவங்களே. எதுவும் பின்னமானதோ அல்லது முழுமையற்றதோ அல்ல. எனவே, அனைத்தும் உண்மையில் தெய்வீகமே. இந்த பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த தன்மையைப் பற்றிய விழிப்புணர்வு,’’ நான்’’ என்ற அஹங்காரத்தை மறந்தால் தான், உங்களது அனுபவத்திற்கு வர முடியும். உங்களுள் உள்ள , அந்த ‘’ நான் ‘’ என்பது மறைந்து விட்டால், நீங்கள், தானாகவே,‘’ நான்- அற்றதை’’த் தெரிந்து கொள்ளத் தகுதி பெற்று விடுகிறீர்கள்.
எள்ளில் எண்ணெயைப் போல, பாலில் வெண்ணெயைப் போல, பூவில் நறுமணத்தைப் போல, பழத்தில் இனிய பழரசத்தைப் போல,விறகில் நெருப்பைப் போல, இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் தெய்வீகம் இருக்கிறது - பாபா