azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 26 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 26 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Prahlada was immersed in the thought of his beloved Lord, when he was thrown downhill, trampled by the elephant and tortured at the direction of his father. He paid no heed, for he heeded only his Lord; he needed only his Lord. The cowherd maidens lost all attachment to the world and to the senses when they listened to Krishna’s flute; they yearned for the sublime spiritual merger with the infinite Lord. By the purification of impulses, one gets into the higher stage where the mystery of the Divine is grasped — this is the realm-of-spirituality (salokya) stage. Then by contemplation of the Divine, the stages of proximity to Divinity (Sameepyam) and likeness of the form of Divinity (Sarupyam), are won. Many great mystic poets like Jayadeva attained this height and sang in that strain. But if you sing that song in the same way, Krishna will not appear. He wants sincerity, not imitation. (Divine Discourse, March 1963)
WEAR THE GARLAND OF DEVOTION GEMS AROUND YOUR NECK AND SATURATE EVERY THOUGHT, WORD AND DEED WITH DIVINE LOVE - BABA
பக்த பிரஹலாதன், அவனது தந்தையின் ஆணைப் படி,மலையிலிருந்து வீசி எறியப் பட்ட போதும், யானையால் மிதிக்கப் பட இருந்த போதும், சித்திரவதை செய்யப் பட்ட போதும், தனது பிரியமான இறைவனது சிந்தனையிலேயே மூழ்கி இருந்தான். அவன் கவலைப் படவே இல்லை; அவனது கவனம் எல்லாம் இறைவன் மீதே இருந்தது;அவனுக்கு இறைவன் மட்டுமே தேவையாக இருந்தது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரது புல்லாங்குழலைக் கேட்ட கோபிகைகள், இந்த உலகம் மற்றும் புலன்களின் மீதுள்ள அனைத்து பற்றுதல்களையும் இழந்து விட்டார்கள் ; அவர்கள் இறைவனுடன் ஒன்றரக் கலந்து விடும் உயர்ந்த நிலைக்காகவே ஏங்கினார்கள். உந்துதல்களைப் பரிசுத்தப் படுத்துவதன் மூலம் ஒருவர், தெய்வீகத்தின் மர்மத்தைப் புரிந்து கொள்ளும் உயர்நிலையை அடைகிறார்- இதுவே ஆன்மீகத்தில் சாலோக்யம் என்ற நிலையாகும். பின்னர், இடையறாத இறைச் சிந்தனையின் மூலம் இறைவனது அருகாமையான சாமீப்யமும், இறைவனைப் போன்ற ரூபத்தைப் பெறுவதான சாரூப்யமும் கிட்டுகின்றன. ஆத்ம பலம் கொண்ட ஜெயதேவர் போன்ற பல தலை சிறந்த கவிஞர்கள் இந்த உயர் நிலையை அடைந்து, அதில் திளைத்துப் பாடினார்கள். ஆனால் நீங்கள் அதே பாட்டை, அதை பாணியில் பாடுவதால் மட்டும், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ப்ரத்யக்ஷம் ஆக மாட்டார். இறைவன் நேர்மையை நாடுகிறான், போலித் தனத்தை அல்ல.
பக்தி எனும் ஜபமாலையில் கழுத்தில் அணிந்து கொண்டு, உங்களது ஒவ்வொரு சிந்தனை, சொல் மற்றும் செயலை தெய்வீக ப்ரேமையில திளைத்திருக்குதாறு செய்யுங்கள் - பாபா