azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

You should realise that for every action there is a consequence. The results of each action depend on the nature of the action, just as the nature of the tree depends on the seed which is sowed. The consequences of one’s actions are inescapable and it is for this reason that the Emperor Manu laid down that all should observe righteousness (Dharma). The consequences of actions may appear sooner or later but they are bound to occur. When you constantly think of God and perform all actions with divine feelings, you will experience the full blossoming of the human qualities. You cannot avoid actions. You must transform work into worship. You have to perform work in this spirit. You cannot substitute prayer for work. You have to combine both work and worship. Hence from now on, consider your every action as dedicated to God. (Divine Discourse, Aug 31, 1992)
TRANSFORM WORK INTO WORSHIP AND WORSHIP INTO WISDOM- BABA
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டு என்பதை நீங்கள் உணர வேண்டும். எவ்வாறு இடப்பட்ட விதையைப் பொறுத்தே ஒரு மரத்தின் தன்மை இருக்குமோ, அவ்வாறே ஒவ்வொரு செயலின் எதிர் விளைவும், அந்தச் செயலின் தன்மையைப் பொறுத்தே இருக்கும். ஒருவரது செயல்களின் எதிர் விளைவுகள் தப்ப முடியாதவை; இந்தக் காரணத்தினால் தான் மனுச் சக்ரவர்த்தி, அனைவரும் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என விதித்துள்ளார். செயல்களின் எதிர் விளைவுகள் உடனேயோ அல்லது தாமதித்தோ தோன்றலாம்; ஆனால் அவை கட்டாயம் ஏற்படும்.எப்போது நீங்கள் இறைவனை இடையறாது சிந்தித்து, அனைத்து செயல்களையும் தெய்வீக உணர்வுகளோடு செய்கிறீர்களோ, நீங்கள் மனிதப் பண்புகள் முழுமையாக மலர்வதை அனுபவிப்பீர்கள். செயல்களை, நீங்கள் தவிர்க்க முடியாது. நீங்கள் , வேலையை, வழிபாடாக மாற்ற வேண்டும். நீங்கள் செயலை ,இந்த உணர்வோடு ஆற்ற வேண்டும். நீங்கள் , செயலுக்கு மாற்றாக, பிரார்த்தனை செய்ய முடியாது. நீங்கள் வேலையையும், வழிபாட்டையும் இணைந்து ஆற்ற வேண்டும். எனவே, இப்போதிலிருந்து, உங்களது ஒவ்வொரு செயலையும், இறைவனுக்கு அர்ப்பணமாகக் கருதுங்கள்.
வேலையை, வழிபாடாகவும், வழிபாட்டை ஞானமாகவும் மாற்றுங்கள் - பாபா