azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 04 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 04 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

The more you grind the sandalwood, the more it yields sandal paste. The more you crush the sugarcane, the more it yields sweet juice. As the gold is heated more and more, it becomes purer and shines with added brilliance. Likewise, the good qualities in a noble person blossom more and more as one passes through the vicissitudes of life. Embodiments of Love! The difficulties of life do not cause any hindrance to a person pursuing a noble course of life. In spite of these, he always remains at peace and contemplates on God constantly. Of all the living beings, to be born a human being is the rarest occurrence (Jantunam Narajanma Durlabham), so this life that you are gifted with is indeed a great good fortune. Having been blessed with such a human birth, you should develop noble thoughts and experience bliss within. Only then will you be truly fortunate. (Divine Discourse, May 06, 2001)
KNOWLEDGE THAT IN NOT PUT INTO PRACTICE IS
LIKE THE FOOD THAT IS NOT DIGESTED - BABA
சந்தனக் கட்டையை அரைக்க அரைக்க, அது அதிகமான சந்தனக் குழம்பைத் தருகிறது. கரும்பைப் பிழியப் பிழிய அதிகமாக இனிமையான கரும்புச் சாறைத் தருகிறது. தங்கத்தை உருக்க உருக்க அது அதிகத் தூய்மை அடைந்து, மேன் மேலும் பிரகாசத்துடன் ஜொலிக்கிறது.அதைப் போலவே, ஒருவர் வாழ்க்கையின் இடர்பாடுகளை அனுபவிக்க அனுபவிக்க, ஒரு சீரிய மனிதரின் நற்குணங்கள், மேலும் மேலும் பரிமளிக்கிறது.அன்பின் திருவுருவங்களே! சீரிய வாழ்க்கையைப் பின்பற்றும் ஒருவருக்கு, வாழ்க்கையின் கஷ்டங்கள் எந்த விதமான தடையையும் ஏற்படுத்துவது இல்லை.இவைகள் இருந்த போதிலும், அவர் எப்போதும் சாந்தியாக இருந்து, இறைவனை இடையறாது தியானிக்கிறார். அனைத்து ஜீவராசிகளிலும் மனிதனாகப் பிறப்பது அரிய ஒன்றாகும் ( ஜந்தூனாம் நரஜன்ம துர்லபம்); எனவே, உங்களுக்குப் பரிசாகக் கிடைத்த இந்த வாழ்க்கை உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய அதிருஷ்டமே. இப்படிப் பட்ட மனிதப் பிறவியைப் பெற்ற நீங்கள் சீரிய சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, உள்ளார்ந்த ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும்.அதன் பிறகே, நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்.
நடைமுறைப் படுத்தப் படாத அறிவு,
ஜீரணமாகாத உணவைப் போன்றதாகும் - பாபா