azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 03 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 03 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
A pure devotee is one who possesses the quality of Udasina, being indifferent to external happening. The other quality a devotee must have is being free from egoism and possessiveness. And one should also get rid of the idea of doership and ownership and surrender everything to God. Krishna has declared in the Gita that such a devotee is dear to Him. Such a devotee naturally develops detachment towards all worldly concerns and is indifferent to the happenings in the phenomenal world. He is indifferent to praise or blame, pleasure or pain. Another quality you must have is giving up attachment to the fruits of one's actions. Everything belongs to the Divine. Hence, engage yourself in worthy acts and experience God. Everyone in the divine mission, unaffected by success or failure, joy or sorrow, will receive God's grace abundantly. (Divine Discourse, Oct 3, 1996)
THE TONGUE SHOULD BE ENGAGED ONLY IN SPEAKING THE TRUTH, IN SPEAKING SWEETLY AND IN CONSUMING WHAT IS PLEASANT AND WHOLESOME FOR THE BODY - BABA
வெளிப்புற நடப்புக்களால் பாதிக்கப்படாத, உதாசீனமான மனப்பாங்கைக் கொண்ட ஒருவரே பரிசுத்தமான பக்தராவார். ஒரு பக்தருக்கு இருக்க வேண்டிய மற்றொரு குணம், அஹங்காரமும், மமகாரமும் இன்றி இருப்பதே. மேலும், தான் செய்கிறோம் மற்றும் தன்னுடையது என்ற உணர்வுகளையும் ஒருவர் விடுத்து, அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில் இப்படிப் பட்ட பக்தனே தனக்கு பிரியமானவர் என்று அறிவித்துள்ளார்.இப்படி பட்ட பக்தர், இயல்பாகவே, உலகியலானவற்றில் பற்றின்றி, உலக நடப்புக்களில் அக்கறையின்றி இருப்பார். அவர் புகழ்ச்சி அல்லது இகழ்ச்சி, இன்பம் அல்லது துன்பம் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப் படமாட்டார்.நீங்கள் பெற்றிருக்க வேண்டிய மற்றொரு குணம், ஒருவரது செயல்களின் விளைவுகளில் பற்றின்றி இருப்பதாகும். அனைத்தும் இறைவனுடையதே.எனவே, உங்களை சீரிய பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு, இறைவனை அனுபவியுங்கள். வெற்றி அல்லது தோல்வி, இன்பம் அல்லது துன்பத்தால் பாதிக்கப் படாது, இறைவனது பணியில் இருப்பவர் அனைவரும், இறை அருளை அபரிமிதமாகப் பெறுவார்கள்.
நாக்கு, சத்தியத்தைக் கூறுவதிலும்,இனிமையாகப் பேசுவதிலும்,உகந்த மற்றும் ஆரோக்யமான உணவை உட்கொள்வதிலும் மட்டுமே ஈடுபட வேண்டும் - பாபா