azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 02 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 02 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Since times immemorial, you have an eternal, infinite and unbroken link to the Atma (Self). Bhagavatam declares, "It is natural for every living creature to go back to the source from where it came." You emerged from the Divine (Atma) and you must merge in the Divine. Till the goal is reached, do not treat lightly the sacred journey of life. Ask yourself, where did you come from? Not from your mother! Your mother gifted the body, but the Soul came from the Lord. You are not the body nor the senses nor the mind. You are the Atma alone. Each of you is a child of immortality. That being the case, why are you seeking this anrutha (untruth)? What is the way to immortality? Removal of immorality is the only way to immortality. Bad traits and evil qualities like attachment, hatred and envy, make you distant from God. Get rid of them, God becomes nearer and dearer to you. (Divine Discourse, Oct 3, 1996)
YOU WORSHIP WITH FAITH AND EXPERIENCE GRACE.FAITH RESULTS IN GRACE WITHOUT YOUR BEING AWARE OF IT- BABA
தொன்று தொட்ட காலத்திலிருந்தே, உங்களுக்கு, ஆத்மாவுடன், நிரந்தரமான, அளவற்ற, இணை பிரியாத தொடர்பு உள்ளது.ஸ்ரீமத் பாகவதம், ‘தான் எந்த மூலாதாரத்திலிருந்து வந்ததோ, அதற்கே திரும்பிச் செல்வது என்பது, ஒவ்வொரு ஜீவராசிக்கும், இயற்கையானதே ‘’ என்று பறைசாற்றுகிறது.நீங்கள் தெய்வீகத்திலிருந்து வெளிப்பட்டுள்ளீர்கள்; நீங்கள் தெய்வீகத்துடன் ஒன்றரக் கலந்தே ஆக வேண்டும்.அந்தக் குறிக்கோளை அடையும் வரை புனிதமான வாழ்க்கைப் பயணத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் தாயாரிடமிருந்து அல்ல ! உங்கள் தாய் இந்த உடலை உங்களுக்கு பரிசாக அளித்தார்; ஆனால் ஆத்மா இறைவனிடமிருந்து வந்தது. நீங்கள் உடலுமல்ல, புலன்கள் அல்ல மனமும் அல்ல. நீங்கள் ஆத்மா மட்டுமே. நீங்கள் ஒவ்வொருவரும் அமரத்துவத்தின் ஒரு புதல்வனே. அப்படி இருக்கும் போது, நீங்கள் ஏன் அன்ருதத்தை ( பொய்மை) நாடுகிறீர்கள் ? அமரத்துவத்திற்கான வழி எது ? ஒழுக்கக் கேட்டை நீக்குவதே, அமரத்துவத்திற்கான ஒரே வழி. தவறான இயல்புகள் மற்றும் தீய குணங்களான பற்றுதல், த்வேஷம் மற்றும் பொறாமை ஆகியவை உங்களை இறைவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்குமாறு செய்து விடுகின்றன. அவற்றை விட்டொழியுங்கள்; இறைவன் உங்களுக்கு நெருக்கமானவராகவும், நேசமுள்ளவராகவும் ஆகி விடுவார்.
நீங்கள் இறை நம்பிக்கையுடன் வழிபட்டு, இறை அருளை அனுபவிக்கிறீர்கள். உங்களை அறியாமலேயே, இறை நம்பிக்கை, இறை அருளை அளிக்கிறது - பாபா