azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 01 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 01 May 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Lord Krishna indicated the qualities one should possess to enable them to earn the love of the Lord. In Bhagavad Gita, Krishna declared, desirelessness (Anapeksha) as the first important quality. All sensual pleasures are ephemeral. But most people are content with sensual pleasures. Greater than the sensual is the transcendental path, Shreyo marga, which confers lasting bliss. When you do any action as an offering to God, it gets sanctified. Such an act becomes anapeksha (a desireless act). Every selfless act of devotion becomes an action free from the taint of desire. The second quality is purity (Shuchi). What is required is both internal and external purity. God cares only for Chitta-shuddhi (purity of the mind). The third quality is dhaksha. This means that the devotee should be steadfast and unwavering in any situation. With their mind firmly rooted in God, they should engage themselves in service of others and perform actions in a spirit of detachment. (Divine Discourse, Oct 3, 1996)
SELFLESS LOVE IS THE BOND THAT WINS GRACE - BABA
இறைவனது அன்பைப் பெறுவதற்கு ஒருவர் பெற்றிருக்க வேண்டிய குணங்களை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சுட்டிக் காட்டியுள்ளார். ஸ்ரீமத் பகவத் கீதையில், ஆசையின்மையே ( அனபேக்ஷா) முக்கியமான முதல் குணம் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அறிவித்துள்ளார்.புலனின்பங்கள் அனைத்தும் குறுகிய காலமே நிலைத்திருப்பவை. ஆனால் பெரும்பாலான மனிதர்கள் புலனின்பங்களோடு திருப்தி அடைந்து விடுகிறார்கள். சாஸ்வதமான பேரானந்தத்தை தரும்,இயற்கைக்கு அப்பாற்பட்ட பாதையான ஸ்ரேயோ மார்க்கம், புலன்களை விடச் சிறந்ததாகும். எந்த ஒரு செயலையும், நீங்கள் இறையார்ப்பணமாகச் செய்யும் போது, அது புனிதமடைந்து விடுகிறது. இப்படிப் பட்ட செயல், ஒரு அனபேக்ஷாவாக (ஆசையற்றதாக) ஆகி விடுகிறது. தன்னலமற்ற ஒவ்வொரு செயலும், ஆசையின் கறை படியாத ஒரு செயலாக ஆகி விடுகிறது. இரண்டாவது குணம் தூய்மை ( சுசி). இங்கு தேவைப்படுவது அக மற்றும் புறத் தூய்மை இரண்டுமே.இறைவன் சித்த சுத்தியை மட்டுமே ( மனத் தூய்மை) பார்க்கிறான். முன்றாவது குணம் தக்ஷா. இதன் பொருள் பக்தன் எந்த சந்தர்ப்பத்திலும் உறுதியாகவும், நிலைகுலையாமலும் இருக்க வேண்டும் என்பதாகும். அவர்கள் தங்கள் மனங்களை இறைவன் பால் உறுதியாக நிலை நிறுத்தி, தங்களை பிறரது சேவையில் ஈடுபடுத்திக் கொண்டு, பற்றற்ற உணர்வோடு, செயல்களை ஆற்ற வேண்டும்.
தன்னலமற்ற ப்ரேமையே இறை அருளைப்
பெற்றுத் தரும் பிணைப்பாகும் - பாபா