azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 29 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 29 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Love is Divine. Love all, impart your love even to those who lack love. Love is like a mariner’s compass. Wherever you may keep it, it points the way to God. In every action in daily life manifest your love. Divinity will emerge from that love. This is the easiest path to God-realisation. But why aren’t people taking to it? This is because they are obsessed with misconception relating to the means of experiencing God. They regard God as some remote entity attainable only by arduous spiritual practices. God is everywhere. There is no need to search for God. All that you see is a manifestation of the Divine. All the human beings you see are forms of the Divine. Correct your defective vision and you will experience God in all things. Speak lovingly, act lovingly, think with love and do every action with a love-filled heart. (Divine Discourse, Jul 5, 1996)
WHOEVER LOVES AND SERVES ALL, HIM THE LORD LOVES AND HONOURS - BABA
ப்ரேமை தெய்வீகமானது. அனைவரையும் நேசியுங்கள்; ப்ரேமை இல்லாதவர் மீதும் உங்கள் ப்ரேமையைப் பொழியுங்கள்.ப்ரேமை ஒரு மாலுமியின் திசை காட்டியைப் போன்றது. நீங்கள் அதை எங்கு வைத்தாலும், அது இறைவனை அடையும் பாதையையே காட்டும். உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் உங்கள் ப்ரேமையை வெளிப்படுத்துங்கள்.அந்த ப்ரேமையிலிருந்து தெய்வீகம் வெளிப்படும். இறைவனை உணருவதற்கான மிகவும் எளிதான வழி இதுவே. ஆனால் மனிதர்கள் ஏன் இந்தப் பாதையில் செல்வதில்லை ?ஏனெனில், அவர்கள் இறைவனை அடைவதற்கான வழியைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தினால் ஆட்டிப் படைக்கப் பட்டு உள்ளார்கள். அவர்கள் இறைவன், கடுமையான ஆன்மீக சாதனைகளால் மட்டுமே பெறக்கூடிய எங்கோ இருக்கும் ஒன்று என்று கருதுகிறார்கள். இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்.இறைவனை எங்கும் தேட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் காண்பது அனைத்தும் இறைவனின் வெளிப்பாடுகளே. நீங்கள் காணும் அனைத்து மனிதர்களும் இறைவனின் ஸ்வரூபங்களே.உங்களது தவறான திருஷ்டியைத் திருத்திக் கொள்ளுங்கள்; இறைவனை எங்கும் உணர்வீர்கள். அன்பாகப் பேசுங்கள், அன்புடன் செயலாற்றுங்கள், அன்புடன் சிந்தியுங்கள்; மேலும் ஒவ்வொரு செயலையும் அன்பு நிறைந்த ஒரு இதயத்துடன் ஆற்றுங்கள்.
அனைவரையும் நேசித்து, அனைவருக்கும் சேவை செய்பவரை,
இறைவன் நேசித்து, கௌரவிக்கிறான் -பாபா