azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 25 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 25 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Embodiments of Divine Love! Wherever you may be, never give room for any differences. Everyone must get rid of all selfishness, self-interest and self-centeredness. Mutual regard (Mamatha), equipoise (Samatha) and forbearance (kshamatha) are basic qualities necessary for every human being. Hence develop love, forbearance and compassion. Realise that love is present in everyone. Get rid of all differences and adhere to your faith and traditions. Learn to live in love and harmony with all the members of your society. When differences of all kinds are given up, love will grow in you and you can have a direct vision of God. Without love, verbal prayers are of no avail. Divine love is the only unifier, motivator and harbinger of joy to everyone. God is love and God can be realised only through love. All saints and religions have emphasized the greatness of love, truth, sacrifice and unity. Therefore cultivate love. (Divine Discourse, Dec 24, 1980)
THERE IS NO STRENGTH GREATER THAN VIRTUE - BABA
தெய்வீக ப்ரேமையின் திருவுருவங்களே ! நீங்கள் எங்கிருந்தாலும், எந்த விதமான கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்காதீர்கள். ஒவ்வொருவரும் அனைத்து சுயநலம், சுயவிருப்பம் மற்றும் சுயநலத்திலேயே குறியாக இருக்கும் தன்மை ஆகியவற்றை விட்டொழித்திட வேண்டும். பரஸ்பர பரிவு ( மமதா), சமச்சீரான மனப்பாங்கு ( ஸமதா) மற்றும் சகிப்புத் தன்மை ( க்ஷமதா ) ஆகியவை ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான அடிப்படை குணங்களாகும். எனவே, ப்ரேமை,சகிப்புத் தன்மை மற்றும் பரிவினை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருள்ளும் ப்ரேமை இருக்கிறது என்பதை உணருங்கள். அனைத்து வேறுபாடுகளையும் விட்டு விட்டு, உங்களது இறை நம்பிக்கை மற்றும் சம்பிரதாயங்களைப் பற்றி ஒழுகுங்கள். உங்களது சமுதாயத்தில் உள்ள அனைவருடனும் ப்ரேமை மற்றும் இசைவுடன் வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். எப்போது எல்லா விதமான வேறுபாடுகளும் விட்டு விடப் படுகின்றனவோ, அப்போது உங்களுள் ப்ரேமை வளரும்; உங்களுக்கு இறைவனது ஒரு நேரடியான தரிசனம் கிடைக்கும். ப்ரேமை இன்றி, வாய் வழியான பிரார்த்தனைகளால் எந்தப் பயனுமில்லை. ஒவ்வொருவரையும் ஒன்றிணைத்து, உத்வேகம் அளித்து, ஆனந்தத்திற்குக் கட்டியம் கூறுவது தெய்வீக ப்ரேமை மட்டுமே. ப்ரேமையே இறைவன்; இறைவனை ப்ரேமையின் மூலமே உணர முடியும். அனைத்து முனிவர்களும், மதங்களும் ப்ரேமை, சத்தியம், தியாகம் மற்றும் ஒற்றுமையின் மகத்துவத்தை வலியுறுத்துகின்றன. எனவே, ப்ரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நல்லொழுக்கத்தை விடச் சிறந்த வலிமை எதுவும் இல்லை- பாபா