azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 24 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 24 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Since I moved freely among people, talking and singing with them, even intellectuals were unable to grasp My truth, My power, My glory, or My real task as Avatar. I can solve any problem however knotty. I am beyond the reach of the most intensive enquiry and the most meticulous measurement. Only those who have recognised My love and experienced it can assert that they have glimpsed My reality. Do not attempt to know Me through the external eyes. When you go to a temple and stand before the image of God, you pray with closed eyes, don’t you? Why? Because you feel that the inner eye of wisdom alone can reveal Him to you. Therefore, do not crave from Me trivial material objects; but, crave for Me from within, and you will be rewarded. The path of Love is the royal road that leads mankind to Me. My grace is ever available to devotees who have steady love and faith. (Divine Discourse, June 19, 1974)
SELFLESS LOVE IS THE BOND THAT WINS GRACE – BABA
நான் எல்லோரிடமும் சுலபமாகப் பழகி, அவர்களுடன் பேசி, பாடி வந்ததால், மேதைகளால் கூட எனது உண்மையை,எனது வலிமையை, எனது மஹிமையை அல்லது எனது உண்மையான அவதாரப் பணியைப் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. எவ்வளவு கடினமான பிரச்சனையானாலும் நான் அதைத் தீர்த்து வைக்க முடியும். மிகுந்த தீவிரமான ஆராய்ச்சி மற்றும் மிகவும் துல்லியமான அளவீடுகளுக்கு எல்லாம், நான் அப்பாற்பட்டவன். என்னுடைய ப்ரேமையை உணர்ந்து அனுபவித்தவர்கள் மட்டுமே, என்னுடைய உண்மையை, ஓரளவாவது கண்ணுற்றதாகக் கூற முடியும். வெளிப்புறக் கண்களால் என்னைத் தெரிந்து கொள்ள முயலாதீர்கள்.ஒரு கோவிலுக்குச் சென்று, பகவானின் விக்ரஹத்தின் முன் நிற்கும் போது, நீங்கள் கண்களை மூடி பிரார்த்தனை செய்கிறீர்கள் அல்லவா? ஏன்? ஏனெனில், உங்களின் அகக் கண்கள் மட்டுமே இறைவனை உங்களுக்குக் காட்ட முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள். எனவே, என்னிடமிருந்து அற்பமான பொருட்களை யாசிக்காதீர்கள்; ஆனால் உள்ளுறையும் என்னையே யாசியுங்கள்; உங்களுக்கு அது கிடைத்து விடும். ப்ரேமையின் பாதையே மனிதகுலத்தை என்னிடம் இட்டு வரும் ராஜபாட்டையாகும். நிலையான ப்ரேமையும், இறை நம்பிக்கையும் கொண்ட பக்தர்களுக்கு என்னுடைய அருள் என்றும் உண்டு.
தன்னலமற்ற ப்ரேமையே, இறை அருளைப் பெற்றுத் தரும் பிணைப்பாகும் - பாபா