azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Jesus came to teach mankind the greatness of divine love. After His father passed away, with His mother’s permission, He embarked to serve the people. He resolved on three tasks: (1) to be filled with Divine love and share it with others (2) to not succumb to praise and (3) to inspire in others the conviction that the Divinity within is omnipresent. Jesus considered spreading the gospel of love as his foremost task. He faced all the ordeals and challenges along His path courageously. He was determined to treat pleasure and pain, sickness and failure with equanimity. He could not bear to see anyone suffer. He was opposed to the traffic in birds going on in Jerusalem. The affected persons turned against him. But Jesus carried on regardless of their hostility and in the end He sacrificed His life for the sake of others and out of His love for all. (Divine Discourse, Dec 25, 1995)
LET COMPASSION AND SACRIFICE BE YOUR TWO EYES; LET EGOLESSNESS BE YOUR BREATH AND LOVE BE YOUR TONGUE- BABA
ஏசு கிருஸ்து,மனித குலத்திற்கு அன்பின் மேன்மையைப் போதிப்பதற்காக வந்தார். அவரது தந்தையாரின் மறைவுக்குப் பிறகு தனது தாயின் அனுமதியுடன், அவர் மக்களுக்கு சேவை செய்யுத் தொடங்கினார்.அவர் மூன்று பணிகளை மேற்கொள்ள முடிவெடுத்தார் : 1) தெய்வீக அன்பால் நிறைந்து, அதனைப் பிறருடன் பகிர்ந்து கொள்வது 2) புகழ்ச்சிக்குப் பணிந்து விடாமல் இருப்பது 3) உள்ளுறையும் தெய்வீகம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளது என்ற திடநம்பிக்கையை மற்றவருள்ளும் உருவாக்குவது. ஏசு கிருஸ்து அன்பின் இறைமொழியை எங்கும் பரப்புவதையே தனது தலையாய கடமையாகக் கருதினார்.அவர் தனது பாதையில் வந்த அனைத்து இன்னல்களையும், சவால்களையும் , தைரியமாக எதிர் கொண்டார். அவர் இன்ப, துன்பங்களையும்,நோய் மற்றும் தோல்விகளையும், சமச்சீரான மனநிலையுடன் ஏற்றுக் கொள்வதில் உறுதி பூண்டிருந்தார்.எவரும் துன்பப்படுவதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.ஜெருசேலத்தில் நடந்து வந்த பறவை வியாபாரத்தை அவர் எதிர்த்தார்.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவருக்கு எதிரிகளானார்கள்.ஆனால், ஏசு கிருஸ்து, அவர்களது எதிர்ப்பைப் பொருட்படுத்தாது, தனது பணியைச் செய்து வந்தார்; இறுதியில், அனைவர் மீதும் அவர் கொண்டிருந்த அன்பின் காரணமாக, மற்றவர்களுக்காகவே தனது உயிரையே தியாகம் செய்தார்.
தயையும், தியாகமும் உங்களது இரண்டு கண்களாக இருக்கட்டும்; அஹங்காரமின்மை உங்களது மூச்சாகவும்,அன்பு உங்கள் நாவாகவும் இருக்கட்டும் - பாபா