azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 09 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 09 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

All religions and scriptures agree that going to the aid of fellow-beings in times of need and saving them from distressing situations is the greatest virtue of a person. Suhrudham Sarva bhutanam (Wish well for all beings), Ekatma Sarva Bhuta Antharatma (the same soul resides within all beings) - these are well known aphorisms from the scriptures. To be friendly towards all beings is the duty of everyone, since the same Atma is there in all beings. Comprehending this truth, it is the duty of everyone born as a human being to do good to others on the basis of love. There is no need to search for God anywhere, since God resides in every being. The body therefore is to be considered the temple of God. Today people are breeding bad thoughts in the mind, thereby polluting the heart which is the seat of the Divine. (Divine Discourse, Dec 25, 1992)
CULTIVATE YOUR HEART TO RAISE A HARVEST OF TRUTH, RIGHTEOUSNESS, PEACE AND LOVE - BABA
தேவைப் படும் சமயங்களில் சகமனிதர்களின் உதவிக்குச் சென்று, அவர்கள் துன்பப்படும் சந்தர்ப்பங்களிலிருந்து அவர்களைக் காப்பதே ஒரு மனிதனின் மிகச் சிறந்த ஒழுக்கமாகும் என்பதை, அனைத்து மதங்களும், மறைநூல்களும், ஏற்றுக் கொள்கின்றன. ஸூக்ருதம் ஸர்வ பூதானாம் ( அனைத்து ஜீவராசிகளின் நலனை விரும்புவது), ஏகாத்மா ஸர்வ பூதா அந்தராத்மா ( ஒரே ஆத்மா தான் அனைத்து ஜீவராசிகளிலும் உறைகிறது) – இவையே வேதங்களின் மிகப் பிரசித்த பெற்ற நீதி மொழிகளாகும். அந்த ஒரே ஆத்மா தான் அனைத்து ஜீவராசிகளிலும் உறைவதால், அனைத்து ஜீவராசிகளுடனும், நட்புடன் இருப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த உண்மையை உணர்ந்து, அன்பின் அடிப்படையில், அனைவருக்கும் நல்லது செய்வது, மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகிறது. இறைவனை எங்கும் தேட வேண்டிய அவசியமில்லை; ஏனெனில், இறைவன் எல்லா ஜீவராசிகளிலும் உறைகிறான். எனவே, இந்த உடலை, இறைவன் உறையும் ஆலயமாகக் கருத வேண்டும். இந்நாளில், மனிதர்கள் தீய எண்ணங்களை மனதில் உருவாக்கிக் கொண்டு, அதன் மூலம், இறைவன் கொலு வீற்றிருக்கும் இதயத்தை மாசுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
சத்யம், தர்மம், சாந்தி, மற்றும் ப்ரேமை எனும் மகசூலைப் பெற
உங்கள் இதயம் எனும் நிலத்தை உழுது, பயிரிடுங்கள் -பாபா