azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 01 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 01 Apr 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
It is indeed a pity that people are choosing not to eat the most nourishing fruit from the garden of Nature. People are climbing the wrong tree and seeking to pluck the wrong fruits, so their appetite is ruined, their taste is vulgarised and their health is destroyed. Only the glory of the Lord can satisfy the hunger of a person, for that person is part of that glory. You can win the Grace of the Lord only by practising righteousness. Righteousness naturally induces the spirit of self-surrender and assiduously cultivates it. With the training that the practice of right conduct (dharma) gives to your senses, your feelings and emotions, you can have steady faith and steady detachment. The Lord is Dharma conceived as a personality. Lord Rama indeed was known as ‘Vigrahavan Dharma’, Righteousness Personified. If you step outside the bounds of righteousness and play foul, you will never win the game of life! (Divine Discourse, Jan 25, 1963)
OFFER YOUR VIRTUES AS FLOWERS –VIRTUES THAT SPREAD BEAUTY AND FRAGRANCE EVERYWHERE - BABA
இயற்கையின் தோட்டத்திலிருந்து மிகவும் ஊட்டமளிக்கக் கூடிய பழத்தை, மனிதர்கள், உண்ணத் தேர்ந்தெடுக்காதது, உண்மையில் பரிதாபகரமானதே. மனிதர்கள் தவறான மரங்களில் ஏறி, தவறான பழங்களைப் பறிக்க முயலுவதால், அவர்களது பசி பாழடைந்து, அவர்களது சுவை கீழ்த்தரமடைந்து, அவர்களது ஆரோக்யம் அழிக்கப் படுகிறது.ஒருவரது பசியை, இறைவனது மாட்சிமையே தீர்த்து வைக்க முடியும்; ஏனெனில் அவரே அந்த மாட்சிமையின் ஒரு அங்கமாகும். நீங்கள் தர்மத்தைக் கடைப்பிடித்தால் மட்டுமே, இறை அருளைப் பெற முடியும். தர்மம் இயற்கையாகவே ,ஆத்ம நிவேதன உணர்வைத் தூண்டி, அதை அயராது வளர்க்கிறது. தர்மத்தைக் கடைப்பிடிப்பது, உங்களது புலன்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளுக்கு அளிக்கும் பயிற்சியால், நீங்கள் நிலைகுலையாத நம்பிக்கை மற்றும் பற்றின்மையைப் பெற முடியும். இறைவன் தர்மத்தின் உருவாகவே கருதப்படுகிறான். பகவான் ஸ்ரீராமர் உண்மையில் ‘’ விக்ரஹவான் தர்ம ‘’( தர்மத்தின் ஸ்வருபம் ) என்றே அழைக்கப் படுகிறார். நீங்கள் தர்மத்தின் வரம்புகளை மீறி, தவறிழைத்தால், வாழ்க்கை எனும் விளையாட்டில் , நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது !
உங்களது நற்குணங்களை- எங்கும் சுந்தரத்தையும், சுகந்ததையும் பரப்பும் நற்குணங்களை, மலர்களாக இறைவனுக்கு அர்ப்பணியுங்கள் - பாபா