azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 31 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 31 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Once, a person in great distress clamoured for a reservation at the booking office of a railway station, but the clerk there was helpless for the person did not know where he wanted to go. He was anxious only to get away, he had had enough of that place. How can anyone help him? All, sooner or later, behave like this. Life is no unmixed good. No one is happy by being immersed in worldly life. Every individual is tossed about by the waves of joy and grief; buffeted by fortune, good or bad; a target of brickbats and bouquets. The evil around affects one’s peace and anxiety, and robs one of sleep and quiet. One therefore tries to escape from all this, but one is not sure to where! The spiritual teacher (Guru) can guide you where to go, which place to seek; but, even a Guru cannot make you reach it. You have to trudge along the road yourself. (Divine Discourse, 14 Jan 1965)
THE SPIRITUAL PATH IS THE PATH OF DETACHMENT, OF SENSE CONTROL AND RIGOROUS MIND TRAINING - BABA
ஒரு முறை ஒரு மனிதர், ஒரு ரயில் நிலயத்தின் டிக்கட் தரும் இடத்தில், தனக்கு ஒரு டிக்கட் வேண்டும் என மிகுந்த வேதனையுடன் கூக்குரலிட்டுக் கொண்டு இருந்தார்; ஆனால் அங்கிருந்த சிப்பந்தியால் அவருக்கு உதவ முடியவில்லை; ஏனெனில் அந்த மனிதருக்கு எங்கு போக வேண்டும் என்பதே தெரியவில்லை. அவருக்கு அங்கிருந்து போய் விட வேண்டும் என்ற கவலை தான் இருந்தது; அந்த இடம் அவருக்குப் போதும் போதும் என்று ஆகி விட்டு இருந்தது. அவருக்கு யார் உதவ முடியும் ? இன்றோ அல்லது நாளையோ, அனைவருமே, இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள். வாழ்க்கை என்பது நல்லவை மட்டுமே உள்ள ஒன்று அல்ல. உலகியலான வாழ்க்கையில் மூழ்கி இருப்பதில் எவருக்கும் சந்தோஷம் இல்லை. ஒவ்வொரு மனிதரும், சுகம் மற்றும் துக்கம் என்ற அலைகளால் புரட்டி எடுக்கப் படுகின்றனர்; நல்லவை அல்லது கெட்டவையான அதிர்ஷ்டங்களுக்கு இடையில் நசுக்கப்படுகின்றனர்; இகழ்ச்சிகள் மற்றும் புகழ்ச்சிகளுக்கு குறியாகின்றனர். சுற்றியுள்ள தீமை ஒருவரது சாந்தியையும், கவலையையும் பாதித்து ,ஒருவரது தூக்கத்தையும், அமைதியையும் பறித்து விடுகின்றது. எனவே, ஒருவர் , இவற்றிலிருந்து எல்லாம் தப்பித்துச் செல்ல முயலுகின்றார்; ஆனால் எங்கு போவது என்பது தான் தெரிவதில்லை ! ஆன்மீக குரு, நீங்கள் எங்கு செல்ல வேண்டும், எந்த இடத்தை நாட வேண்டும் என்று வழி காட்ட முடியும் ; ஆனால் ஒரு குரு கூட, நீங்கள் அந்த இடத்தை அடையச் செய்ய முடியாது. நீங்களே தான் உங்களை அந்தப் பாதையில் முயற்சியுடன் அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆன்மீகப் பாதை என்பது, பற்றின்மை, புலனடக்கம் மற்றும் தீவிர மனப்பயிற்சியின் பாதையாகும் - பாபா