azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 30 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 30 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
In the past, Divine incarnations rid the world of evil by destroying the few fanatics and ogres who wrought it. But in the present times, fanaticism and felony reigns in every heart. The evil people are legion, no one is free from that taint, and all are wicked to some extent or the other. Therefore, everyone needs correction. Everyone must be educated and guided in the right path. Every being is a pilgrim destined to return to God and merge in Him. But most people have forgotten the path, they wander like lost children, wasting precious time in the by-lanes of the world. Human beings are the best amongst creation who can feel, think and experience their own journey across time! Armed with the sword of discrimination (Viveka) and the shield of renunciation (Vairagya), you must use this precious opportunity to transform yourself to become Divine - that is your destiny, the plan and purpose of your being. (Divine Discourse, Jan 25, 1963)
THE PERSON WHO DISCRIMINATES WELL BEFORE ENGAGING IN ANY ACTIVITY, WILL NATURALLY BE RIGHTEOUS IN CONDUCT AND BEHAVIOUR- BABA
முன்பெல்லாம், தெய்வீக அவதாரங்கள் சில வெறியர்கள் மற்றும் அரக்கர்களை அழிப்பதன் மூலம், அவர்கள் செய்த தீமைகளிலிருந்து , இந்த உலகை விடுவித்தார்கள். ஆனால் தற்காலத்தில்,வெறித்தனமும், குற்றங்களும் ஒவ்வொரு இதயத்திலும் ஆட்சி செய்கின்றன. தீயவர்கள் ஒரு அணியாக உள்ளனர்; எவரும் இந்தக் களங்கமின்றி இல்லை; எல்லோரும் ஏதோ ஒரு அளவு தீயவர்களாக இருக்கின்றனர். எனவே, ஒவ்வொருவரையும் திருத்த வேண்டி உள்ளது.ஒவ்வொருவருக்கும் போதனை செய்து, சரியான பாதையில் வழி நடத்த வேண்டி உள்ளது. ஒவ்வொரு ஜீவராசியும், இறைவனிடம் திரும்பி வந்து அவனுடன் ஒன்றரக் கலக்க வேண்டிய , புனித யாத்ரீகரே. ஆனால் பலர் பாதையை மறந்து, வழி தவறிய குழந்தைகளைப் போலத் திரிந்து, உலகின் சந்து பொந்துகளில் தங்களது விலை மதிக்க முடியாத காலத்தை விரயம் செய்கின்றனர். உணர்ந்து,சிந்தித்து, காலத்தைக் கடந்து செல்லும் தங்கள் பயணத்தை அனுபவிக்கும் திறன் கொண்ட, படைப்புக்களிலேயே தலை சிறந்தவர்கள், மனிதர்களே! விவேகம் எனும் வாளுடன், வைராக்யம் என்ற கவசத்தையும் பூண்டு, நீங்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி உங்களை தெய்வீகமானவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் – இதுவே உங்களது முடிவும், திட்டமும், உங்களது வாழ்க்கையின் குறிக்கோளும் ஆகும்.
எந்த ஒரு செயலிலும் ஈடுபடும் முன்பே, நன்கு பகுத்தறிபவர், இயற்கையாகவே, தங்களது நடத்தை மற்றும செயல்பாட்டில் தார்மீகமாகமானவர்களாகவே இருப்பார்கள் - பாபா