azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 29 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 29 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

To reform one’s tendencies and character is indeed an uphill task. One may have studied all the text-books of spiritual practice, also read all the scriptures, and may even have lectured for hours on them; but one slips into error when confronted by temptation. Like the land that is parched, the heart may appear to be free from any crop of evil, but when the first showers fall, the seeds and roots underneath the soil change the parched land into a carpet of green. You may have the best of vegetables, you may have the most capable chef in the world, but if the copper vessel in which you prepare the soup is not tinned, the dish you cook will be highly poisonous. Similarly, you must ‘tin’ your heart with truth, right conduct, peace and divine love. Only then will it become a vessel fit to repeat holy names, practice meditation, observe religious vows, do ritualistic worship, and so on. (Divine Discourse, 13 Jan 1965)
ஒருவரது மனப்பாங்குகளையும், குணநலன்களையும் சீர்திருத்துவது என்பது உண்மையிலேயே ஒரு கடினமான காரியமே. ஒருவர், ஆன்மீக சாதனைகளைப் பற்றிய அனைத்துப் புதகங்களையும் படித்திருக்கலாம், அனைத்து சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்திருக்கலாம்; அவைகளைப் பற்றி பலமணி நேரம் பிரசங்களையும் கூட நிகழ்த்தியிருக்கலாம் ; ஆனால், மனக் கவர்ச்சிகளை எதிர் கொள்ளும்போது ஒருவர் தவறு இழைத்து விடுகிறார். தரிசாகக் கிடக்கும் நிலத்தைப் போல, இதயம் எந்த விதமான தீய பயிர்களும் இல்லாதது போலக் காட்சி அளிக்கலாம்; ஆனால் முதல் மழை பெய்தவுடனேயே, நிலத்தடியில் இருக்கும் விதைகளும், வேர்களும், இந்தத் தரிசு நிலத்தை ஒரு பசுமைக் கம்பளமாக மாற்றி விடுகின்றன. உங்களிடம் மிகச் சிறந்த காய்கறிகள் இருக்கலாம்,உலகத்திலேயே மிகத் திறமை வாய்ந்த சமயல்காரர் இருக்கலாம்; ஆனால் நீங்கள் ரசம் சமைக்கும் செப்புப் பாத்திரத்தில் முலாம் பூசியிருக்காவிடில், நீங்கள் சமைக்கும் உணவு விஷமாக மாறி விடும். அதைப் போவே, நீங்கள் உங்கள் இதயத்திற்கு சத்தியம், தர்மம், சாந்தி, மற்றும் தெய்வீக ப்ரேமையிலால் ஆன ‘’ முலாம்’’ பூச வேண்டும். அதன் பிறகே, அது, புனித நாமஸ்மரணைக்கும், தியானத்திற்கும், விரதங்களைக் அனுசரிப்பதற்கும், சடங்கு ரீதியான வழிபாடுகள் போன்றவற்றை செய்வதற்கும் ஏற்ற ஒரு பாத்திரமாக ஆகும்.