azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 28 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 28 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
An old year is gone by and a new year has come, and people joyfully celebrate the arrival of the new year. Do you know how many centuries have elapsed since the history of mankind? There is no use turning back and watching the road traversed – your duty is to watch the road ahead and march steadily towards your goal. It is lack of faith that causes you to lose temper and fly into fits of anger; it is lack of faith in yourself and in others. If you see yourself as truly the undefeatable Divine Self and everyone around you as your reflections, just as the scriptures declare them to be, you will never be provoked to get angry. What you must resolve today in the auspicious New Year is to march steadily on the spiritual path to manifest your Divinity. Resolve to do this one thing – Practice first, and then preach! (Divine Discourse, May 23, 1965)
THE YEAR BECOMES NEW, THE DAY BECOMES HOLY, WHEN YOU SANCTIFY IT BY SPIRITUAL DISCIPLINE, NOT OTHERWISE - BABA
ஒரு பழைய வருடம் முடிந்து, ஒரு புது வருடம் வந்துள்ளது; மக்கள் புத்தாண்டின் வரவை சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள்.மனித குலத்தின் வரலாற்றில், எத்தனை நூற்றாண்டுகள் கழிந்து விட்டன என்பதை நீங்கள் அறிவீர்களா? நடந்த வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதனால் எந்தப் பயனும் இல்லை – உங்கள் கடமை முன்னால் உள்ள பாதையை கவனித்து, சீராக உங்கள் குறிக்கோளை நோக்கிச் செல்வது தான். நம்பிக்கை இன்மையே, உங்களை நிதானத்தை இழக்க வைத்து, கோபப் பட வைக்கிறது; இது, உங்கள் மீதும், பிறர் மீதும் நம்பிக்கை இன்மையினால் தான். நீங்கள், மறை நூல்கள் பறை சாற்றுவதைப் போல, உங்களை உண்மையிலேயே வெல்லவே முடியாத பரமாத்மாகவே இனம் கண்டு கொண்டு, உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் உங்களது பிரதிபிம்பங்களாகவே கண்டீர்கள் என்றால், நீங்கள் ஒரு போதும் கோபப்பட மாட்டீர்கள். மங்களகரமான இந்த புத்தாண்டு தினத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய பிரதிக்ஞை, ஆன்மீகப் பாதையில் நிலையாக முன்னேறி உங்களது தெய்வீகத்தை வெளிப்படுத்துவோம் என்பது தான். முதலில் கடைப்பிடிப்போம், பின்னரே போதிப்போம் – இந்த ஒன்றைச் செய்வோம் என்று உறுதி பூணுங்கள்.
நீங்கள் ஆன்மீக சாதனையால் பரிசுத்தமாக்கினால் மட்டுமே வருடம் புதியதாகவும், நாள் புனிதமானதாகவும் ஆகுமே அன்றி வேறு வழியில் அல்ல - பாபா