azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 25 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 25 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
You may doubt whether such a small word like Rama, Sai or Krishna can take you across the boundless sea of worldly life. People cross vast oceans on a tiny raft; they are able to walk through dark jungles with a tiny lamp in their hands. The Name, even the Pranava (Om) which is smaller, has vast potentialities. The raft need not be as big as the sea. The recitation of the Divine Name is like the operation of a bore well to tap underground water; it is like the chisel-stroke that will release the image of God imprisoned in the marble. Break the encasement and the Lord will appear; cleave the pillar, as Prahlada (Lord Vishnu's devotee) asked his father to do, and the Lord who is ever there will manifest Himself. Churn and you bring the butter, latent in the milk, into view. (Divine Discourse, Jan 13, 1965)
KEEPTHE NAME OF THE LORD ALWAYS RADIANT ON YOUR TONGUE AND MIND: IT WILL KEEP THE ANTICS OF THE MIND UNDER CONTROL - BABA
இவ்வளவு சிறிய வார்த்தைகளான, ராமா, சாய் அல்லது கிருஷ்ணா ஆகியவை, உங்களை இந்த கரை காண முடியாத பவசாகரத்தை எவ்வாறு கடக்கச் செய்ய முடியும் என நீங்கள் சந்தேகப் படக் கூடும்.மனிதர்கள் பரந்த விரிந்த சமுத்திரத்தை, ஒரு சிறிய தோணியைக் கொண்டு கடந்து விடுகிறார்கள்; அடர்ந்த கானகத்தில், தங்கள் கைகளில் ஏந்தியுள்ள சிறு விளக்குகளைக் கொண்டு, நடந்து சென்று விடுகிறார்கள்.இறை நாமம், இன்னும் சிறியதான ப்ரணவமான ஓம் கூட, அளவற்ற ஆற்றல்களைக் கொண்டதாகும். தோணி, கடலளவு பெரியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இறை நாமஸ்மரணை என்பது நிலத்தடி நீரை, எடுப்பதற்காக ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டுவது போன்றது; பளிங்குக் கல்லிலிருந்து, உள்ளிருக்கும், இறை ரூபத்தை வெளிக் கொணர வல்ல, உளி அடியைப் போன்றது. வெளி உறையை உடையுங்கள்; இறைவன் தோன்றுவான்; பக்த ப்ரஹலாதன் தன் தந்தையிடம் கூறியதைப் போல, தூணைப் பிளந்திடுங்கள்; அதில் என்றும் உறைந்திருக்கும் இறைவன் வெளி வந்திடுவான். கடையுங்கள்; பாலில் மறைந்திருக்கும் வெண்ணையை, நீங்கள் கண் முன்னால் கொண்டு வருவீர்கள்.
இறைநாமத்தை உங்கள் நாவிலும், மனதிலும் எப்போதும் ஒளி விட்டுத் திகழுமாறு வையுங்கள்; அது மனதின் கோமாளித்தனங்களைக் கட்டுப்படுத்தும் -பாபா