azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 23 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 23 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Do not engage yourself in the cultivation of or the promotion of wants and desires. That is a never ending process of sowing and reaping; you will never reach contentment and one desire when satisfied, will fan the thirst for ten more. Do not run after devious desires or crooked satisfactions. All roads leading to the realm of the senses are tortuous and blind, only the road that leads to the path of the Lord is straight. Cultivate righteousness in every action, that will reveal the Divine Self. Straightforwardness will enable you to overcome the three gunas (qualities). No single Guna should dominate; all must be tamed to fill the lake of bliss. It is your internal bliss that matters, not the external, the sensory, the objective and the worldly. If the inner poise or inner equilibrium is undisturbed by external ups and downs, that is a sure sign of spiritual success. (Divine Discourse, 12 April 1959)
“ I- WANT- PEACE “. “I” IS EGO, “WANT” IS DESIRE. REMOVE EGO AND DESIRE AND
YOU WILL HAVE PEACE - BABA
நீங்கள் , உங்களை, விருப்பங்களையும், ஆசைகளையும் வளர்த்துக் கொள்வதிலோ அல்லது பெருக்கிக் கொள்வதிலோ ஈடுபடுத்திக் கொள்ளாதீர்கள். அது ஒரு முடிவே இல்லாத, விதைப்பதும்,அறுவடை செய்வதும் போன்றதாகும்; நீங்கள் ஒரு போதும் திருப்தி அடைய மாட்டீர்கள்; ஒரு ஆசை நிறைவேறியதும், அதுவே மேலும் பத்து ஆசைகளைத் தூண்டி விடும். தீய ஆசைகள் மற்றும் நேர்மையற்ற விருப்பங்களின் பின்னால் அலையாதீர்கள். புலன்களின் அரங்கத்திற்கு இட்டுச் செல்லும் அனைத்து பாதைகளும், கடினமானதும், கண்மூடித் தனமானதும் ஆகும்; இறைவனது வழிக்கு இட்டுச் செல்லும் பாதை ஒன்றே நேரானதாகும். ஒவ்வொரு செயலிலும் தர்மத்தைக் கடைப்பிடியுங்கள்; அதுவே பரமாத்மாவை வெளிப்படுத்தும். நேர்மை, உங்களை முக்குணங்களையும் வெற்றி கொள்ள வைக்கும். எந்த ஒரு குணமும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது; அனைத்தையும், ஆனந்தம் எனும் ஏரியை நிரப்புமாறு பழக்க வேண்டும்.உங்களது உள்ளார்ந்த ஆனந்தமே முக்கியமானதே அன்றி வெளிப்படையான,புலன்களாலான,பொருட்கள் மற்றும் உலகியலானவை அல்ல. உங்களது உள்ளார்ந்த நிலை அல்லது உள்ளார்ந்த சமநிலை, வெளிப்புறத்தின் ஏற்றத் தாழ்வுகளினால் பாதிக்கப் படாமல் இருக்குமானால், அதுவே ஆன்மீக வெற்றியின் ஒரு உறுதியான சின்னமாகும்.
"எனக்கு-சாந்தி-வேண்டும்". 'எனக்கு' - அஹங்காரம், 'வேண்டும்' - ஆசை. அஹங்காரத்தையும், ஆசையையும் நீக்கி விடுங்கள். உங்களுக்கு "சாந்தி" கிடைக்கும் - பாபா