azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 19 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 19 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Like a brass vessel that must be scrubbed with tamarind, washed and dried to shine like new, your mind also must be treated with goodness and service, repetition of the Lord’s name, execution of beneficial deeds, and contemplation of the well-being of all. The Sun is up here in the sky, every day. It is the passing clouds that sometimes hide it from your vision. Similarly, the sensory world is the cloud that hides the Divine Soul (Atma) who is ever shining in the firmament of your heart. The same mind that gathers the clouds can also disperse them in an instance! For, it is the wind that collects them from all the quarters and renders the sky dark. And in the next moment, they change the direction and send them in a scurry to wherever they came from! So too, your mind is all powerful. Train it to disperse the clouds of illusion, not gather them. [Divine Discourse, 12 April 1959]
KEEPTHE NAME OF THE LORD ALWAYS RADIANT ON YOUR TONGUE AND MIND: IT WILL KEEP THE ANTICS OF THE MIND UNDER CONTROL - BABA
எவ்வாறு ஒரு பித்தளைப் பாத்திரத்தை, புதிய ஒன்றைப் போலப் பளபளப்பதற்காக, புளி போட்டு நன்றாகத் தேய்த்து, அலம்பிக் காய வைக்க வேண்டுமோ , அவ்வாறே, உங்கள் மனதையும், நல்லவை மற்றும் சேவை, இறை நாமஸ்மரணை, நற்காரியங்களை ஆற்றுதல், அனைவரது க்ஷேமத்தையும் தியானித்தல் போன்றவைகளால் பதப்படுத்த வேண்டும். சூரியன் ஒவ்வொரு நாளும் ஆகாயத்தின் உச்சியில் இருக்கிறான். கலையும் மேகங்களே சில சமயம் அதை உங்களது திருஷ்டியிலிருந்து மறைக்கின்றன.அதைப் போலவே, உங்களது இதயக் குகையில் என்றும் பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ஆத்மாவை, மேகங்களைப் போன்ற புலன்களாலான இந்த உலகமே, மறைத்து விடுகிறது.இந்த மேகங்களை ஒன்று சேர்க்கும் அதே மனதே, அவற்றை ஒரு நொடியில் கலைக்கவும் வல்லதாகும் ! ஏனெனில் காற்றே அவற்றை நான்கு திசைகளிலிருந்தும், சேகரித்து, ஆகாயத்தை இருட்டாக்குகிறது. அடுத்த நொடியில் அவை திசை மாறி, அவை எங்கிருந்து வந்ததோ, அந்த இடத்திற்கே விரட்டப் பட்டு விடுகின்றன !அதைப் போலவே, உங்கள் மனமும் சக்தி வாய்ந்ததாகும். அதை, மாயையின் மேகங்களைத் திரட்டாது, கலைத்து விடுமாறு செய்வதற்குப் பயிற்சி அளியுங்கள்.
இறைநாமத்தை உங்கள் நாவிலும், மனதிலும் எப்போதும் ஒளி விட்டுத் திகழுமாறு வையுங்கள்; அது மனதின் கோமாளித்தனங்களைக் கட்டுப்படுத்தும் -பாபா