azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 16 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 16 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Your child will give you great joy through its play and prattle, but when it interferes with your work or demands your attention when you are working on something important, you get very angry with it. Your child now becomes your source of joy as well as grief! Remember, there is nothing in the world which can give you unmixed joy. Even if there is one such thing, when it is lost, you will become very sad! This is in the very nature of this world. So try to correct the very source of joy and sorrow, the mind. Control your mind and train it to accept and see the real nature of this objective world, which attracts and repels you in turns. This is the real fruit of education! [Divine Discourse, Dec 20, 1958]
PLEASURE IS AN INTERVAL BETWEEN TWO PAINS – BABA
உங்கள் குழந்தை தன் விளையாட்டு மட்டும் மழலையால் உங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது ; ஆனால் அதுவே, உங்கள் வேலையில் குறுக்கிட்டாலோ அல்லது நீங்கள் மிக முக்கியமான வேலை செய்து கொண்டு இருக்கும் போது,அதை கவனிக்க வேண்டும் என்று அடம் பிடித்தாலோ, நீங்கள் அதனிடம் மிகுந்த கோபம் கொள்கிறீர்கள்.உங்கள் குழந்தை இப்போது உங்களது சந்தோஷம் மற்றும் துக்கம் என்ற இரண்டிற்கும் மூல காரணமாகிறது! இந்த உலகில் உங்களுக்குக் கலப்பற்ற சந்தோஷத்தைத் தருவது எதுவுமே இல்லை. அப்படியே ஒன்று இருந்தாலும் கூட, அதை இழந்து விடும் போது, நீங்கள் மிகவும் வருத்தம் அடைகிறீர்கள் ! இதுவே இந்த உலகின் இயற்கையான இயல்பாகும்.எனவே, சுகம் மற்றும் துக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் மனதைத் திருத்த முயலுங்கள். உங்கள் மனதைக் கட்டுப் படுத்துங்கள்; உங்களை மாறி மாறி ஈர்க்கவும் , விரட்டவும் செய்யும் பொருட்களாலான இந்த உலகின் உண்மையான இயல்பைக் கண்டு அதை ஏற்றுக் கொள்ளுமாறு உங்கள் மனதைப் பயிற்றுவியுங்கள். இதுவே, கல்வியின் உண்மையான பலனாகும் !
இன்பம் என்பது, இரண்டு துன்பங்களுக்கு இடையே உள்ள இடைவெளியாகும் - பாபா