azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 14 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 14 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
You know only the present, what is happening before your eyes; you do not know that the present is related to the past and is preparing the course of the future. Each birth wipes out the memory of the one already experienced. People do not realise that the end of this cycle of birth and death is in their own hands. The tree came from the seed and the seed from the tree and so on, since the beginning of time. You may not know which came first – tree or seed, but you should know that you can easily put an end to the cycle by frying the seed. A fried seed will not sprout again! You claim to have mastered your senses and all low desires, but they sprout at the very first opportunity, just like grass that grows after the first summer shower. Just as you seek the udder of the cow for the milk it gives, seek only the Lord and His Glory in Nature. As a matter of fact, Nature is useful only when it adds to the wonder and awe that it is able to provoke and sustain. (Divine Discourse, Feb 12, 1964).
Release from bondage to inborn impulses is the real liberation - Baba
உங்கள் கண்கள் முன்னால் நடக்கின்ற நிகழ்காலத்தை மட்டுமே நீங்கள் அறிவீர்கள்; இந்த நிகழ்காலம், கடந்த காலத்துடன் தொடர்பு கொண்டது, எதிர்காலத்தின் பாதையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். ஒவ்வொரு பிறவியும், ஒருவர் முன்னர் அனுபவித்த ஒன்றின் நினைவுகளை துடைத்து விடுகிறது. இந்த பிறப்பு , இறப்பு என்ற சூழலின் முடிவு அவர்கள் கைகளில்தான் இருக்கிறது என்பதை மனிதர்கள் உணருவதில்லை. மரம் விதையிலிருந்து வந்தது, விதை மரத்தில் இருந்து வந்தது என்று ஆதி காலத்திலிருந்து போய் கொண்டே இருக்கிறது. உங்களுக்கு எது முதலில் வந்தது – மரமா அல்லது விதையா- என்பது தெரியாமல் இருக்கலாம்; ஆனால் இந்த சுழற்சியை, விதையை வறுத்து விடுவதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பது, உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு வறுக்கப் பட்ட விதை மறுபடியும் முளைக்காது ! நீங்கள் உங்களது புலன்கள் மற்றும் அனைத்து கீழ்த்தரமான ஆசைகளை வென்று விட்டீர்கள் என்று மார் தட்டிக் கொள்கிறீர்கள்;ஆனால், கோடை மழை பெய்தவுடனேயே துளிர் விட்டு விடும் புல்லைப் போல, அவை கிடைக்கும் முதல் வாய்ப்பினில் மேல் எழுந்து வந்து விடுகின்றன. எவ்வாறு நீங்கள் அது தரும் பாலுக்காக, பசுவின் மடியையை நாடுகிறீர்களோ, இயற்கையில் இறைவனையும், அவனது மாட்சிமையையும் நாடுங்கள். அதனால் தூண்டித் தக்க வைக்கக் கூடிய அற்புதம் மற்றும் பயபக்தியை அதிகரித்தால் மட்டுமே , உண்மையில், இயற்கை பயனளிப்பதாக இருக்கும்.
வாசனாக்களின் பிடியிலிருந்து விடுபடுவதே உண்மையான மோக்ஷமாகும் - பாபா