azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Remember, like underground water, the Divine is there in everyone. The Lord is the Indweller in all beings; He is All-pervading. He is the Soul (Atma) of every being. He is in you as much as in everyone else. He is not more in a rich person or bigger in a fat being; His spark illumines the cave of the heart of every one. The sun shines equally on all; His Grace is falling evenly on all. It is only you that erect obstacles that prevent the rays of His Grace from warming you. Do not blame the Lord for your ignorance or foolishness or perversity. Just as underground water wells up in a gushy spring when a bore is sunk down to that depth, by constant chanting of the Divine Name, touch the spring of Divinity, so that one day it gushes out plentifully, granting you coolness and unending joy. (Divine Discourse, 20 Dec 1958)
When a person’s heart is completely filled with the love of God, he or she will chant God’s Name ceaselessly- Baba
நிலத்தடி நீரைப் போல, தெய்வீகம் ஒவ்வொருவருள்ளும் உறைகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறைவன் அனைத்து ஜீவராசிகளுக்குள் வசிக்கிறான்; அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறான். அவனே ஒவ்வொரு ஜீவராசியின் ஆத்மா. அவன் உங்களுள் இருப்பதைப் போலவே, ஒவ்வொருவருள்ளும் இருக்கிறான்.அவன் பணக்காரனுள் அதிகமாகவோ அல்லது குண்டாக இருப்பவருள் பெரிதாகவோ இருப்பதில்லை.அவனது சுடர், ஒவ்வொருவரின் இதய குகைக்கு ஒளியூட்டுகிறது. சூரியன் அனைவருக்கும் சமமாகவே பிரகாசிக்கிறான்;இறைவனது அருளும் அனைவர் மீதும், ஒரே மாதிரியாக பொழிகிறது.நீங்கள் தான், உங்களுக்கு இதம் அளிக்க வல்ல அவனது அருட்கிரணங்களைத் தடுக்கும் இடையூறுகளை உருவாக்குகிறீர்கள். உங்களது அறியாமை அல்லது அறிவீனம் அல்லது அற்பத்தனத்திற்கு, இறைவனை குறை கூறாதீர்கள். எவ்வாறு, நீர்மட்ட அளவிற்கு ஒரு ஆழ்துளைக் கிணறைத் தோண்டினால், நிலத்தடி நீர் தானாகவே பீறிட்டு எழுகிறதோ, அவ்வாறே, இடையறாத இறைநாமஸ்மரணையின் மூலம், தெய்வீக நீரூற்றைத் தொட்டு விடுங்கள்; பின்னர் என்றோ ஓர் நாள் அது உங்களுக்கு குளிர்ச்சியையும்,முடிவே இல்லாத ஆனந்தத்தையும் அளிக்கும் வண்ணம் அபரிமிதமாக பீறிட்டு எழுந்து விடும்.
எப்போது ஒருவரது இதயம் இறைவன் பால் கொண்ட அன்பால் முழுமையாக நிரம்புகிறதோ, பின் அவனோ அல்லது அவளோ, இடையறாத இறைநாமஸ்மரணை செய்வர் - பாபா