azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 09 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 09 Mar 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
I have come to reform you. I will not leave you until I do that. Even if you get away before I do that, do not think you can escape Me, I will hold on to you. I am not worried if you leave Sai, for I am not anxious that there should be a huge gathering here and a big following around Me. Who invited all of you here? Without any printed invitation, thousands are coming to Sai. But, of one thing, be assured. Whether you come to Me or not, you are all Mine. This Sai Mata (Mother of all) has the love of a thousand mothers towards Her children; that is why I do so much lalana (fondling) and so much palana (protecting). If I appear to be angry, remember, it is only love in another form that I use to evince my disappointment when you do not shape up in line with my guidance. (Divine Discourse, Feb 11 1964)
நான் உங்களை சீர்திருத்துவதற்காக வந்துள்ளேன்.அதை நான் செய்யும் வரை உங்களை விடப் போவதில்லை. நான் அவ்வாறு செய்வதற்கு முன்பே, நீங்கள் விலகி விட்டாலும்,என்னிடமிருந்து தப்பி விட முடியும் என்று எண்ணாதீர்கள்; நான் உங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன். நீங்கள் சாயியை விட்டு விலகி விட்டால், நான் கவலைப் படுவதில்லை; ஏனெனில், இங்கு மிகப் பெரிய கூட்டம் இருக்க வேண்டும்; என்னைத் தொடர்ந்து பலர் வர வேண்டும் என்ற கவலைகள் எனக்கில்லை.உங்கள் அனைவரையும் இங்கு யார் அழைத்தார்கள்? அச்சடித்த அழைப்பு இன்றி, ஆயிரக்கணக்கில் பலர் சாயியிடம் வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் என்னிடம் வந்தாலும், வராவிட்டாலும், அனைவரும் என்னுடையவரே. தனது குழந்தைகளின் பால், இந்த சாய்மாதாவிற்கு, ஒரு ஆயிரம் தாய்மார்களின் அன்பு உள்ளது.; அதனால் தான் , நான் இவ்வளவு லாலானாவும் ( கொஞ்சுதல் ), பாலனாவும் (பாதுகாத்தல்) செய்கிறேன். நான் கோபப்படுவதாகத் தோன்றினால், அது, என்னுடைய அறிவுரைக்கு ஏற்ப, நீங்கள் உருவாகவில்லையே என்ற எனது ஏமாற்றத்தை வெளிப்படுத்த நான் பயன்படுத்தும் எனது அன்பின் மற்றொரு தோற்றமே, என்பதை நினைவில் கொள்ளுங்கள்.