azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 23 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 23 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

When a person gets rid of ignorance, one can experience this infinite Light, this spiritual flame, declared the ancient sages. Where did they experience this Divinity? Not in the external world. The sages regarded the human body as a shrine in which the Divine is the Indweller. Exploring the five life breaths and the five sheaths of the human body, they experienced the Light of the Spirit in their hearts within. They realised that those who love God can find Him nearer to themselves than anything in the world. To those who have no yearning for God, He is farther than the farthest object in the planet! Remember, every individual is a spark of the Divine. You are not just a fragment of the Nature or simply a combination of the five basic elements (earth, water, fire, air, ether). You are indeed verily a part (amsa) of the immortal Omni-Self. (Divine Discourse, Feb 19 1987)
ஒருவர் தனது அஞ்ஞானத்தை விடும் போது, இந்த அளவற்ற ஜோதியான ஆன்மீகச் சுடரை அனுபவிப்பார் என, பண்டைய கால முனிவர்கள், பறை சாற்றினார்கள். இந்த தெய்வீகத்தை அவர்கள் எங்கு அனுபவித்தார்கள் ? வெளி உலகில் அல்ல. முனிவர்கள், இந்த உடலை , உள்ளுறையும் இறைவன் கொலு வீற்றிருக்கும் ஒரு சன்னிதானமாகக் கருதினார்கள். மனித உடலின் பஞ்ச பிராணன்கள் மற்றும் பஞ்ச கோசங்களை ஆராய்ந்து, அவர்கள் தங்களது இதயங்களுக்குள் இந்த ஆத்ம ஜோதியை அனுபவித்தார்கள். இறைவன் பால் அன்பு வைப்பவர்கள், அவனை, இந்த உலகில் உள்ள எதைக் காட்டிலும், தங்களுக்கு அருகாமையிலேயே காண்பார்கள் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இறைவனுக்காக ஏங்காதவர்களுக்கு, அவன் இந்த பிரபஞ்சத்தில், மிகத் தொலைவில் இருக்கும் எந்தப் பொருளையும் விடவே, அதிகத் தொலைவில் இருக்கிறான் ! ஒவ்வொருவரும் தெய்வீகத்தின் ஒளிக்கீற்றே என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஏதோ இயற்கையின் ஒரு சிறு துண்டோ அல்லது பஞ்ச பூதங்களின் வெறும் ஒரு இணைப்போ மட்டும் அல்ல. நீங்கள் உண்மையிலேயே பரமாத்மாவின் ஒரு அம்சமே.