azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 20 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 20 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Education today highlights the accumulation of things. But giving up is equally needed. Renunciation is not a loss; it is highly profitable, as you acquire joy thereby. Renunciation means freedom, surrender to God and surrender to love. God is love. Love can be known only through expansion of love. When students leave schools and colleges and involve themselves in families, societies, communities and countries, they must set examples of simplicity, humility and mutual service. They must anchor their lives in Righteousness (Dharma) and wisdom (Jnana). So teachers and parents must imbibe it in themselves and instruct students. That will help them lead model lives and lead others to earn peace and calm. You must learn, more than anything else, discipline and patience. Life is an exercise in the sadhana of 'give and take.' Do not derive delight from 'taking' alone. 'Give' and you get the right to 'take'. (Divine Discourse, 8 Feb, 1987)
கல்வி இன்று, பொருட்களைக் குவிப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், தியாகம் செய்வதும் அதே அளவு தேவையானதே. துறவு மனப்பாங்கு ஒரு நஷ்டம் அல்ல; அதனால் உங்களுக்கு ஆனந்தம் கிடைப்பதால், அது மிகவும் லாபகரமானதே. துறவு மனப்பாங்கு என்றால், சுதந்திரம், இறைவனிடம் சரணாகதி, அன்பிடமும் சரணாகதி. அன்பே இறைவன். அன்பை, அன்பின் விசாலத்தால் மட்டும் தான் அறிய முடியும். மாணவர்கள் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை விட்டுச் சென்று குடும்பங்கள், சமுதாயங்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களில் ஈடுபடும் போது, எளிமை, பணிவு மற்றும் பரஸ்பர சேவையின் முன்னுதாரணங்களாக விளங்க வேண்டும். அவர்கள் தங்களது வாழ்க்கையை, தர்மம் மற்றும் ஞானத்தில் நிலை கொள்ளச் செய்ய வேண்டும். எனவே, ஆசிரியர்களும், பெற்றோர்களும் இதை தங்களுக்குள் முதலில் ஏற்றுக் கொண்டு, மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அது அவர்களை முன்னுதாரணமான வாழ்க்கையை நடத்தச் செய்து, மற்றவர்களையும், சாந்தி மற்றும் அமைதியைப் பெறும் வண்ணம் இட்டுச் செல்ல உதவும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் கட்டுப்பாடு மற்றும் பொறுமையைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கை, ‘’ கொடுத்து, எடுப்பதற்கான’’ ஆன்மீக சாதனையாகும். ‘’ எடுத்துக் கொள்வதில் ‘’ மட்டுமே உவகை கொள்ளாதீர்கள்.‘’ கொடுங்கள் ‘’, அதன் பின்னரே, நீங்கள், ‘’ எடுத்துக் கொள்ளும் ‘’ உரிமையைப் பெறுகிறீர்கள்.