azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Ego is deep rooted in every person from their countless previous lives. It grows very fast in this life too, seeking sensual pleasure, possessions in plenty, applause and appreciation, authority over others, fame and fortune. It can be removed only by relentless enquiry into your true Reality. When you are awake, you experience a variety of relationships. You are interested in a multiplicity of people, possession and problems. You pass through joy and grief, praise and ridicule, insult and injury. When you are dreaming, the entire outer world fades away. When you are awake, you experience pleasure and pain; you plunge into fear and throw yourself in despair. When asleep, you are no longer alert or active. You are alone with the Divine Soul (Atma), which is your reality. The Atma is with you through all the three stages, even though you ignored it and perhaps denied it! This Atma is the truth, “That Thou Art”! (Tat-Twam-Asi). (Divine Discourse, Jan 2, 1987)
அஹங்காரம், ஒவ்வொரு மனிதனுள்ளும், அவனது முந்தைய எண்ணற்ற பிறவிகளிலிருந்து ஆழமாக வேறூன்றியதாகும்.இந்தப் பிறவியிலும் கூட அது , புலனின்பங்கள், அபரிமிதமான சொத்துக்கள், மெச்சுதல் மற்றும் பாராட்டுக்கள், பிறர் மீது ஆதிக்கம், பெயர் மற்றும் புகழ் ஆகியவற்றை நாடி மிக வேகமாக வளருகிறது. உங்களது உண்மை நிலையைப் பற்றிய இடையறாத ஆராய்ச்சியின் மூலம் மட்டுமே, அதை நீக்க முடியும்.நீங்கள் விழித்திருக்கும் போது பலவிதமான உறவுகளை அனுபவிக்கிறீர்கள். பல விதமான மக்கள், உடைமைகள் மற்றும் பிரச்சனைகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது.நீங்கள், சுக,துக்கங்கள்,புகழ்ச்சி, இகழ்ச்சிகள், அவமானங்கள் மற்றும் அவதிகளுக்கு உள்ளாகிறீர்கள். நீங்கள் கனவு காணும்போது, இந்த வெளி உலகம் அனைத்தும் தேய்ந்து மங்கி விடுகிறது. நீங்கள் விழித்துக் கொண்ட பிறகு, நீங்கள் சுக துக்கங்களை அனுபவிக்கிறீர்கள்; நீங்கள் அச்சத்தில் ஆழ்ந்து, உங்களையே பரிதவிப்பில் வீழ்த்திக் கொள்கிறீர்கள். ஆழ்ந்து உறங்கும் போது, நீங்கள் கவனமாகவோ அல்லது இயங்கிக் கொண்டோ இருப்பதில்லை. உங்களது உண்மை நிலையான ஆத்மாவோடு நீங்கள் தனித்து இருக்கிறீர்கள். நீங்கள் அதை உதாசீனப்படுத்தினாலும், ஏன் நிராகரித்தாலும் கூட, மூன்று நிலைகளிலும் ( விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம்) ஆத்மா உங்களோடு தான் இருக்கிறது ! இந்த ஆத்மாவே சத்தியம் ‘’ அது நீங்களே ( தத்வம் அஸி )’’.