azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 17 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 17 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Divinity is inherent and immanent in every living being and the process of reminding man of that fact began with the very dawn of human history. What has to be done to lead the Divine Life is just the removal of the fog that hides the Truth and makes one imagine one is something else — something inferior, evanescent, material, and momentary. All are holy, pure, and part of eternity. But these things shine in each in proportion to their spiritual practices, just as bulbs spread illumination according to the wattage. There is no body that is not sustained by the Absolute; there is no name that does not indicate the Universal. All objects are suffused by that Principle; all names are attributes of its Glory. Divine Life is based on the quality of calm serenity (satwa guna), which must be cultivated. (Divine Discourse, 14 Dec, 1958)
ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும், தெய்வீகம் உள்ளுறைகிறது; இந்த உண்மையை மனிதனுக்கு நினைவூட்டும் முறை, மனித சரித்திரம் தோன்றிய நாளிலிருந்தே தொடங்கிய ஒன்றாகும். தெய்வீக வாழ்க்கை நடத்துவதற்குச் செய்ய வேண்டியது எல்லாம், சத்தியத்தை மறைத்து, ஒருவர் தன்னை வேறு ஏதோ ஒன்றாக- அதாவது ஏதோ மட்டமான, நிலையற்ற, உலகியலான மற்றும் சில கணமே இருக்கும் ஏதோ ஒன்றாகக் கற்பனை செய்து கொள்ள வைக்கும், அந்தப் பனித் திரையை நீக்குவது மட்டுமே. அனைவரும் தெய்வீகமானவர்கள், பரிசுத்தமானவர்கள், மற்றும் நித்ய சத்தியத்தின் அங்கங்களே.ஆனால், இவை எல்லாம், ஒவ்வொருள்ளும், மின்சக்திக்கு ஏற்றவாறு ஒளி பரப்பும், மின் விளக்குகளைப் போல,அவர்களது ஆன்மீக சாதனைக்கேற்ற விகிதாசாரத்தில் , பிரகாசிக்கின்றன. பரப்ரம்மத்தால் போஷிக்கப் படாதவர் எவரும் இல்லை; அதைக் குறிப்பிடாத நாமமும் எதுவுமில்லை. அனைத்து பொருட்களிலும் அந்த தத்துவம் வியாபித்துள்ளது; அனைத்து நாமங்களும் அதனது மாட்சிமையின் குணங்களே. தெய்வீக வாழ்க்கை ஸத்வ குணத்தை ஆதாரமாகக் கொண்டது; இதனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.