azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 09 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 09 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
In any field, at anytime, anywhere, for a person endowed with the six precious qualities of zeal, courage, fortitude, intelligence, ability and valour (Utsaham, Sahasam, Dhairyam, Buddhi, Shakti, Parakramam), success is assured. These qualities will contribute to all-round well-being. However these qualities will challenge you with various difficulties that you must confront, from time to time. Just as a student must clear tests and examinations to receive a degree, these qualities are also subject to trials in the form of losses, troubles, pain, suffering and even calumny. Such trials should be regarded as stepping stones to your high achievements. One has to overcome these troubles with courage and self-confidence, and move ahead. When you face difficulties with courage, you are bound to succeed. (Divine Discourse, Jan 14, 1997)
உற்சாகம்,சாஹஸம், தைரியம், புத்தி,சக்தி, பராக்ரமம் ஆகிய ஆறு விலை பதிப்பற்ற குணங்களைக் கொண்ட ஒருவருக்கு, எந்தத் துறையிலும்,எப்போதும், எங்கும், வெற்றி நிச்சயமே. இந்த குணங்கள் எல்லா விதத்திலும் நன்மை அளிக்கும். ஆனால், இந்த குணங்கள் அவ்வப்போது, நீங்கள் எதிர் கொள்ள வேண்டிய பல விதமான இடையூறுகளை அளித்து, உங்களுக்கு சவாலாக அமையும். எவ்வாறு ஒரு மாணவர், ஒரு பட்டம் பெறுவதற்கு பரிசோதனைகள் மற்றும் பரீட்சைகளை வென்றாக வேண்டுமோ, அவ்வாறே, இந்த குணங்களும் கூட, இழப்புக்கள்,துன்பங்கள், வேதனைகள், துயரம் ஏன் அவதூறுகள் போன்ற சோதனைகளுக்கு உட்பட்டே ஆக வேண்டும். இப்படிப் பட்ட சோதனைகள், உங்களது உயர்ந்த சாதனைகளுக்கான ஏணிப் படிகளாகக் கருதப்பட வேண்டும். இந்தத் துன்பங்களை, ஒருவர் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் சமாளித்து, முன்னேற வேண்டும். எப்போது நீங்கள், துன்பங்களை தைரியமாக எதிர் கொள்கிறீர்களோ, நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.